Monday, September 17, 2012

கணவர் மீது சித்ரவதை புகார்: யுக்தாமுகி விவாகரத்து?

கணவர் மீது சித்ரவதை புகார்: யுக்தாமுகி விவாகரத்து? கணவர் மீது சித்ரவதை புகார்: யுக்தாமுகி விவாகரத்து?
கணவர் மீது சித்ரவதை புகார்: யுக்தாமுகி விவாகரத்து?

பிரபல இந்தி நடிகை யுக்தாமுகி இவர் தமிழில் பூவெல்லாம் உன் வாசனம் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். யுக்தாமுகி 1999-ல் உலக அழகி பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கும் நாக்பூரைச் சேர்ந்த ஓட்டல் அதிபர் பிரின்ஸ்டுலிக்கும் 2008-ல் திருமணம் நடந்தது.

இவர்களுக்கு கன் வால்முகி என்ற குழந்தை உள்ளது. சந்தோஷமாக சென்ற அவர்கள் குடும்ப வாழ்க்கையில் திடீர் புயல் வீச ஆரம்பித்துள்ளது. கணவர் பிரின்ஸ்டுலி மீது யுக்தாமுகி மும்பை போலீசில் பரபரப்பான புகார் அளித்தார். கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக புகாரில் தெரிவித்து இருந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இருவருக்கும் ஓரிரு மாதங்களுக்கு முன்பே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் தற்போது பிரிந்து வாழ்வதாகவும் நெருக்கமானவர்கள் கூறினர். மத்தியஸ்தர்கள் மூலம் சமரச முயற்சி நடந்து அதுவும் தோல்வி அடைந்து விட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து கணவரை விவாகரத்து செய்ய யுக்தாமுகி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோர்ட்டில் விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்வது குறித்து வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறாராம்.

இந்த ஆண்டில் இதுவரை 104 படங்கள் ரிலீஸ்: வசூல் ஈட்டிய டாப் 10 படங்கள்

இந்த ஆண்டில் இதுவரை 104 படங்கள் ரிலீஸ்: வசூல் ஈட்டிய டாப் 10 படங்கள்

இந்த ஆண்டு தமிழில் கடந்த ஆகஸ்டு மாதம் வரை முகமூடியை சேர்த்து 100 படங்கள் வரை வந்தன. தொடர்ந்து இம்மாதம் மன்னாரு, சுந்தரபாண்டியன், பாகன், படங்கள் வந்துள்ளன. இதில் உதயநிதி ஸ்டாலின் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படம் 150 நாட்களை தாண்டி ஓடி பெரும் தொகை லாபம் ஈட்டியுள்ளது.

தெலுங்கு, தமிழ் ஆகிய இரு மொழிகளில் வந்த நான் ஈ படம் தமிழகத்தில் மட்டும் ரூ. 15 கோடிக்கு மேல் வசூல் பார்த்துள்ளது. தெலுங்கில் ரூ.75 கோடி ஈட்டியுள்ளது. இந்த படம் ரூ. 40 கோடி செலவில் எடுக்கப்பட்டது. வசூல் ரூ.100 கோடியை தாண்டும் என்கின்றனர்.

லிங்குசாமி இயக்கத்தில் வந்த வேட்டை படமும் லாபம் சம்பாதித்தது. இதில் ஆர்யா, மாதவன், அமலாபால், சமீரா ரெட்டி இணைந்து நடித்து இருந்தனர், இந்த படத்தை இந்தியிலும் ரீமேக் செய்திருந்தார்கள்.

விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடித்த நண்பன் படமும் வசூல் பார்த்தது. ஷங்கர் இயக்கியிருந்தார். ரூ. 1 கோடி செலவில் எடுத்த மெரீனா படம் ரூ. 3 கோடி லாபம் சம்பாதித்தது. அம்புலி 3டி படமும் ரூ. 4 கோடி வசூல் ஈட்டியது. இதனை ரூ. 2 கோடி செலவில் எடுத்து இருந்தனர்.

கலகலப்பு, காதலில் சொதப்புவது எப்படி, அட்டகத்தி படங்கள் நன்றாக ஓடின. வழக்கு எண் 18/9, கழுகு, உருமி, நான் படங்களும் பேசப்பட்டன. பில்லா 2, தோனி, 3, சகுனி, முகமூடி படங்கள் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டன. ஆனால் இவற்றில் சில படங்கள் வசூலில் திருப்தி அளிக்கவில்லை என்கின்றனர். பல படங்கள் நஷ்டத்தை சந்தித்து உள்ளன.

நான் எந்த நடிகைக்கும் போட்டியில்லை: ஓவியா

நான் எந்த நடிகைக்கும் போட்டியில்லை: ஓவியா நான் எந்த நடிகைக்கும் போட்டியில்லை: ஓவியா
நான் எந்த நடிகைக்கும் போட்டியில்லை: ஓவியா

'சில்லுன்னு ஒரு சந்திப்பு' படத்தில் விமல் ஜோடியாக நடிக்கிறார் ஓவியா. எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் இப்படத்தை ஆர்.ரவிலல்லின் இயக்குகிறார். இதில் 'பஸ்ஸே பஸ்ஸே' என்று தொடங்கும் பாடலை விமல் பாடியுள்ளார். இதன் வெளியீட்டு விழா நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.

இதில் பங்கேற்ற நடிகை ஓவியா நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ் படங்களில் தொடர்ந்து நடிப்பேன். இங்குள்ள ரசிகர்கள், நடிகர்-நடிகைகளிடம் மிகுந்த அன்பு காட்டுகிறார்கள். 'Òகலகலப்பு' படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக நடித்தேன். படத்துக்கு தேவையாக இருந்ததால் அப்படி நடித்தேன். அதை ரசிகர்கள் வரவேற்றார்கள்.

'கலகலப்பு' படத்தில் நடித்தபோது எனக்கும் அஞ்சலிக்கும் போட்டி ஏற்பட்டதாக கிசுகிசுக்கள் பரவி உள்ளன. நான் எந்த நடிகைக்கும் போட்டி இல்லை. எனக்கு நானே போட்டியாக இருக்கிறேன்.

'சில்லுன்னு ஒரு சந்திப்பு' படத்தில் விமலுடன் நடிக்கிறேன். இது அவருடன் நான் நடிக்கும் 3-வது படம். இதில் மாணவி கேரக்டரில் நடிக்கிறேன். தொடர்ந்து 'மூடர் கூடம்' என்ற படத்தில் நடிக்க உள்ளேன். மலையாள படங்களில் நடிக்கவும் பேசி வருகிறேன. தமிழில் நிறைய படங்கள் வந்தால் சென்னையில் வீடு பார்த்து குடியேறுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Sunday, September 16, 2012

எம்.டிவி ஷோவில் ஏ.ஆர்.ரகுமான் பாடுகிறார்

எம்.டிவி ஷோவில் ஏ.ஆர்.ரகுமான் பாடுகிறார் எம்.டிவி ஷோவில் ஏ.ஆர்.ரகுமான் பாடுகிறார்
எம்.டிவி ஷோவில் ஏ.ஆர்.ரகுமான் பாடுகிறார்

'எம்.டிவி' பிரபலங்களை வைத்து நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இசை, நாட்டியம் மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை வைத்து சிறப்பு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்குகிறது.

'எம்.டிவி'யின் இசை நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது ஆகும். ஏற்கனவே ஒரு சீஸன் இசை நிகழ்ச்சியை தயாரித்து வழங்கியது. தற்போது இசை நிகழ்ச்சியின் இரண்டாவது சீஸனை தொடங்க உள்ளது.

'மியூசிக் ஷோ' இரண்டாவது சீஸனில் பிரபல இசைக் கலைஞர்களுடன் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானும் கலந்து கொண்டு பாடுகிறார். இதுபற்றி நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஒருவர் கூறியதாவது:-

இந்த முறை இசை உலகில் முன்னணியில் உள்ளவர்களை வைத்து இந்த நிகழ்ச்சியை தயாரிக்க திட்டமிட்டோம். இந்நிகழ்ச்சியில், ஏ.ஆர்.ரகுமானும் பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சியின் மிகப்பெரிய சொத்து அவர்தான்.

இந்த நிகழ்ச்சி தொடரில் லக்கி அலி, கைலாஷ் கேர் ஆகியோரும் பங்கேற்கின்றனர். இருவரும் இசை உலகில் பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர்கள். டிரம் கலைஞர் ரஞ்சித் பரோம் மற்றும் பிறதுறை கலைஞர்களும் கலந்து கொள்கின்றனர்.

பாகிஸ்தான் பாடகர் அதிப் ஆலம் வருவார் என எதிர்பார்க்கிறோம். நவம்பர் மாதம் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சிக்கான ஷ¨ட்டிங், அடுத்த வாரம் தொடங்குகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நகைச்சுவை நடிகர் லூஸ்மோகன் திடீர் மரணம்

நகைச்சுவை நடிகர் லூஸ்மோகன் திடீர் மரணம் நகைச்சுவை நடிகர் லூஸ்மோகன் திடீர் மரணம்
நகைச்சுவை நடிகர் லூஸ்மோகன் திடீர் மரணம்

பிரபல காமெடி நடிகர் லூஸ் மோகன் இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 84. லூஸ்மோகன் 1000 படங்களுக்கு மேல் நடித்து உள்ளார். ரஜினிகாந்துடன் 'மூன்று முகம்', 'மாப்பிள்ளை', 'தர்மதுரை' படங்களிலும், கமலுடன் 'நானும் ஒரு தொழிலாளி' படத்திலும் நடித்துள்ளார். 'ரோஜாப்பூ ரவிக்கைகாரி' படத்தில் சிவக்குமாருடன் இணைந்து நடித்தார். பார்த்திபனுடன் 'அழகி' படத்திலும் வந்தார்.

சென்னை மயிலாப்பூர் சாலை தெருவில் உள்ள வீட்டில் மகன் கார்த்திக்குடன் வசித்து வந்தார். சில மாதங்களாக அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இன்று அதிகாலை அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. கை, கால்களும் செயல் இழந்தன.

உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது. லூஸ் மோகன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் அஞ்சலி செலுத்தினார்கள்.

இன்று மாலை உடல் இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மயிலாப்பூர் ஐ.ஜி. ஆபீஸ் பின்புறம் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது. மரணம் அடைந்த லூஸ் மோகனுக்கு ரேவதி, கீதா, லட்சுமி என்ற மகள்களும் உள்ளனர். சென்னை தமிழில் பேசி காமெடி செய்த முதல் நடிகர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்பில் விபத்து: நடிகை யாமிகவுதம் காயம்

படப்பிடிப்பில் விபத்து: நடிகை யாமிகவுதம் காயம் படப்பிடிப்பில் விபத்து: நடிகை யாமிகவுதம் காயம்
படப்பிடிப்பில் விபத்து: நடிகை யாமிகவுதம் காயம்

சென்னை, செப். 15-

மொழி படத்தை இயக்கி பிரபலமானவர் ராதா மோகன். இவர் தற்போது கவுரவம் என்ற படத்தை டைரக்டு செய்து வருகிறார். இதில் நாயகனாக அல்லு சிரிஷ், நாயகியாக யாமிகவுதம் நடிக்கின்றனர். யாமி மும்பையை சேர்ந்தவர். கவுரவம் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். இந்த படத்தை பிரகாஷ்ராஜ் தயாரிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு ராஜமுந்திரியில் விறுவிறுப்ப ாக நடக்கிறது. இதற்காக படக்குழுவினர் அங்கு முகாமிட்டுள்ளனர். பாடல் காட்சியொன்றை படமாக்கியபோது யாமிகவுதம் கீழே விழுந்து காயம் அடைந்தார். பாடல் காட்சியில் யாமிகவுதம் சைக்கிள் ஓட்டி செல்வது போல் படமாக்கினர்.

அப்போது நிலை தடுமாறி சைக்கிலோடு கீழே விழுந்தார். அவருக்கு பலத்த அடிபட்டு ரத்தம் கொட்டியது. இதை பார்த்ததும் படக்குழுவினர் பதறினார்கள். உடனடியாக டா� ��்டர் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. வலி நிவாரண மாத்திரைகளை யாமி சாப்பீட்டு ஓய்வு எடுத்தார். இந்த விபத்தால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது.

மெரினா பட வழக்கில் கோர்ட்டு புது உத்தரவு

மெரினா பட வழக்கில் கோர்ட்டு புது உத்தரவு மெரினா பட வழக்கில் கோர்ட்டு புது உத்தரவு
மெரினா பட வழக்கில் கோர்ட்டு புது உத்தரவு

சிவகார்த்திகேயன், ஓவியா ஜோடியாக நடித்த படம் மெரினா. பாண்டிராஜ் இயக்கினார். கடந்த பிப்ரவரியில் இப்படம் ரிலீசானது. இந்த படத்துக்கு எதிராக இணை தயாரிப்பாளர் பாலகிருஷ்ணன் சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

மெரினா படத்தில் என்னை தயாரிப்பாளராக போடுவதாக பாண்டிராஜ் கூறினார். இதற்காக என்னிடம் ரூ.50 லட்சம் வாங்கினார். ஆனால் படம் ரிலீசாகும் போது எனது பெயரை தயாரிப்பாளர் என்று போடவில்லை. இதுகுறித்து சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். அங்கு இருதரப்புக்கும் சமரசம் ஏற்பட்டது. எனக்கு ரூ.50 லட்சம் தருவதாக பாண்டிராஜ் ஒப்புக்கொண்டார். லாபத்திலும் பங்கு தருவதாக கூறினார்.

ஆனால் சொன்னபடி கொடுக்கவில்லை. எனவே மெரினா படத்தின் வரவு � ��ெலவு கணக்குகளை ஆராய அட்வகேட் கமிஷனை நியமிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

வழக்கை 7-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதி சந்திர சேகரன் விசாரித்து வக்கீல் ரங்கனை அட்வகேட் கமிஷனாக நியமித்து இரு தரப்பிலும் வரவு செலவு கணக்கை விசாரித்து வருகிற 20-ந்தேதி கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். 

Popular Posts