
பிரபல இந்தி நடிகை யுக்தாமுகி இவர் தமிழில் பூவெல்லாம் உன் வாசனம் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். யுக்தாமுகி 1999-ல் உலக அழகி பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கும் நாக்பூரைச் சேர்ந்த ஓட்டல் அதிபர் பிரின்ஸ்டுலிக்கும் 2008-ல் திருமணம் நடந்தது.
இவர்களுக்கு கன் வால்முகி என்ற குழந்தை உள்ளது. சந்தோஷமாக சென்ற அவர்கள் குடும்ப வாழ்க்கையில் திடீர் புயல் வீச ஆரம்பித்துள்ளது. கணவர் பிரின்ஸ்டுலி மீது யுக்தாமுகி மும்பை போலீசில் பரபரப்பான புகார் அளித்தார். கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக புகாரில் தெரிவித்து இருந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இருவருக்கும் ஓரிரு மாதங்களுக்கு முன்பே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் தற்போது பிரிந்து வாழ்வதாகவும் நெருக்கமானவர்கள் கூறினர். மத்தியஸ்தர்கள் மூலம் சமரச முயற்சி நடந்து அதுவும் தோல்வி அடைந்து விட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கணவரை விவாகரத்து செய்ய யுக்தாமுகி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோர்ட்டில் விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்வது குறித்து வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறாராம்.
0 comments:
Post a Comment