Friday, March 15, 2013

பரதேசி திரைவிமர்சனம்

சாலூர் கிராமம், 1937ல்… வறுமையை கிராமத்தை போட்டு ஆட்டுவிக்கிறது. இந்த ஊர்ல தண்டோரா போடுகிறார் ராசா. டீ எஸ்டேட்டில் நல்ல வேலை இருக்கிறது. நல்ல சம்பளம், நல்ல உடை, உணவு, வாரத்தில் ஒரு நாள் விடுப்பு என்று எல்லாம் ஆசை காட்டி அவர்களை வேலைக்கு கூப்பிடுகிறான் கங்காணி. கிராமத்தில் இருந்து ஏராளமானவர்கள் அவனை நம்பி அவன் பின்னால் போகிறார்கள். 48 நாட்கள் நடைக்குப் பிறகு டீ எஸ்டேட்டைப் போய்ச் சேருகிறார்கள். அங்கு போன பிறகுதான், இனிக்க இனிக்க பேசி அழைத்து வந்த கங்காணி கொடூரமான உண்மை முகம் தெரிய வருகிறது. போனவர்கள் எல்லாமே அடிமையாக்கப்பட அழகான பெண்களின் கற்பும் சூறையாடப்படுகிறது. அதிலிருந்து அவர்கள் மீண்டு வந்தார்கள்… அந்த மக்கள் என்ன ஆகிறார்கள் என்பதை முழுவதுமாக சொல்கிறது.
படத்தின் முதல் பாதி சாலூர் கிராமத்தில் நடக்கிறது. ஒரு மணி நேரம் சில நிமிடங்களிலே கரைந்து போனது போன்று இருக்கிறது. கல்யாணம் நடக்கும் போது சாவு விழ மக்கள் நல்ல சோறு சாப்பிட வேண்டும் என்பதற்காகவே, அதை மறைத்துக் கொண்டு கல்யாணத்தை நடத்தி முடிப்பது அதர்வா, வேதிகா சம்பந்தப்பட்ட காட்சி, கங்காணி மக்களை மூளைச் சலவை செய்து வேலைக்கு அழைத்துச் செல்வதில், முதல் பாதி ஓடிப் போகிறது. இடைவேளையில் வரும் காட்சி ஜீரணிக்க முடியாததாக இருக்கிறது.
படத்தின் இடைவேளைக்குப் பிறகு வரும் காட்சிகள் அனைத்தும் டீ எஸ்டேட்டிலேயே நடக்கின்றன. அங்கு மக்கள் எப்படி அடிமையாக்கப்படுகிறார்கள். பெண்களின் கற்பை சூறையாடும் வெள்ளைக்கார துரை, நோய் வந்து சாகும் மக்கள் என அனைத்தும் அழுத்தமான காட்சிகள். முதல் பாதி ஒரு மணி நேரமும் இரண்டாவது பாதி ஒன்றேகால் மணிநேரமும் ஓடுகிறது படம். அதிலும் முதல் பாதி சட்டென முடிந்து போகிறது. என்னடா அதுக்குள்ள இடைவேளை வந்துருச்சா… என அனைவரும் கேட்கிறார்கள். இரண்டாவது பாதி கொஞ்சம் டீட்டெயிலான காட்சிகளை உள்ளடக்கியிருக்கிறது.
படம் பார்த்துவிட்டு வெளியே வந்த பிறகு இந்த ராசா கேரக்டருக்கு அதர்வாவை விட்டா வேற யாராவது செட் ஆவாங்களா என்று யோசிச்சுப் பார்த்தால், யாருமே செட் ஆகிற மாதிரி தெரியலை. அந்த அளவுக்கு கேரக்டராகவே அவரை மாற்றியிருக்கிறார் பாலா. படம் முழுக்க ‘பேக்கு’ மாதிரி வரும் அதர்வா, சாப்பிட உட்காரும் இடத்தில் சாப்பாடு கொடுக்கப்படாததால் அழுது கொண்டே போகும் காட்சியில் ஆரம்பித்து படம் முழுக்க உயிரோட்டமாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக வரும் வேதிகா, அங்கம்மா கேரக்டரில் வருகிறார். அதர்வாவை முதலில் கலாய்ப்பதும் பின்பு, அவரிடம் தன்னையே இழப்பதுமான கேரக்டர் இவருடையது. கணவன் தன்னை விட்டு ஓடிப் போய்விட டீ எஸ்டேட்டில் தனது குழந்தையுடன் அடிமையாக உழைக்கிறார் தன்ஷிகா. தன் குடிசையிலேயே அதர்வா வந்து தங்க அவரை ஓட விட்டு துரத்தி அடிப்பதும் பின்பு அவர் மீது பரிவு காட்டுகிறார் இவர். கொஞ்சம் போல்டான பெண் கேரக்டர். இவர்கள் தவிர, தங்கராசு, கருத்தக்கண்ணி கேரக்டரில் வரும் ஜோடிகள், வேதிகாவின் அம்மா, கங்காணி கேரக்டரில் வரும் ஜெர்ரி, டாக்டர் கேரக்டரில் வருகிற சிவசங்கர் என படம் வருபவர்கள் எல்லோருமே ஏதோ ஒரு விதத்தில் நம் மனதை அழுத்திச் செல்கிறார்கள்.

பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே ஹிட்டாகிவிட்டன. பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். ஒருவேளை பாலா குச்சி வெச்சு வேலை வாங்கியிருப்பாரோ என்னவோ, நாஞ்சில் நாடனின் வசனத்தில் ‘இந்த நரகக் குழியில் நீயும் வந்து விழுந்திட்டியே…’ என்று அதர்வா புலம்பும் அந்த ஒரு வசனமே போதும். அதற்கு மேலும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. செழியனின் கேமிராவுக்குள் நுழைந்து சாலூர் கிராமத்தின் மக்களும் அவர்கள் டீ எஸ்டேட்டில் அவர்கள் படும் துன்பமும் காவியமாக வெளிப்பட்டிருக்கிறது. கிஷோர் படத்தொகுப்பும் அருமையாக இருக்கிறது.
ரெட் டீ என்னும் நாவலைத் தழுவி, பரதேசி படத்தின் கதை, திரைக்கதையை எழுதி இயக்கியிருக்கிறார் பாலா. பாலாவின் படங்களில் சிறந்த படம் என்று ஒன்றைச் சொல்லச் சொன்னால் கண்ணை மூடிக் கொண்டு பரதேசியை சொல்லி விடலாம். திரைக்கதையாகட்டும், படத்தை உருவாக்கிய விதத்திலும் பாலா எப்போதுமே கொண்டாடப்பட வேண்டிய இயக்குநராகிவிட்டார். இந்தப் படத்தின் பத்திரிகையளர் சந்திப்பில் பாலா, ‘இந்தப் படத்தைப் பார்த்த பிறகு, டீ குடிக்கிறதுக்கு முன்னால இந்தப் படம் உங்களுக்கு நினைவுக்கு வரும்…’ என்று பேசினார். ஆனால் என்னைப் பொறுத்தவரை இனிமேல் டீ என்று எழுதினால் கூட பரதேசி தான் நினைவுக்கு வரும்…!
Tags: paradesi review, paradesi thirai vimarsanam, paradesi thirai vimarsanam in tamil, paradesi vimarsanam, thirai vimarsanam of paradesi, பரதேசி, பரதேசி full movie free dowload, பரதேசி movie, பரதேசி movie online, பரதேசி online, பரதேசி review, பரதேசி thirai vimarsanam, பரதேசி torrent download, பரதேசி vimarsanam, பரதேசி சினிமா விமர்சனம், பரதேசி திரை விமர்சனம், பரதேசி படம் விமர்சனம், பரதேசி பாடல், பரதேசி பாடல் வரிகள், பரதேசி விமர்சனம்

Popular Posts