மோதிரக் கையால் ஷொட்டு வாங்கிய பையன் (’பாய்ஸ்’) அவர். தலைகீழாகக் குட்டி கர்ணம் அடித்துதான் நடிப்புத்துறைக்கு வந்தார். முதல் படத்தில் பத்தோடு பதினொன் றாக வந்தாலும்… பளிச்சென்று மெதுவாகத் தேறி வந்தார்.
மாணவப் பிரதிநிதியாக இவர் வளைந்தாட்டம் போட்ட சமயத்தில் பளிச்சென்று பழக்கம் வந்தது அவ்விட நடிகையோடு கையெழுத்து போடாத கலகல ஒப்பந்தம் ஒன்று இருவருக்கும் நிறைவேற… குழாய்ப் புட்டு சகிதமாகப் படகு வீட்டில் நடிகை விருந்து கொடுத்தார்.
அப்போது அந்தப் படகே கதகளி ஆடியதாம். அந்த படகுப் பழக்கத்தில் ஜில்லான நடிகை பிறகு அதிரடி அப்பா படத்தின்போது கேமராவுக்கு வெளியே செமத் தியாகச் சுத்தினாராம் இவரோடு!
அதற்கு முன்பாக மொத்த மாநிலத்தையும் கட்டிப் போட்ட படத்தில் தன்னோடு லவ்விய பெண்ணுக்கு, ‘கார போண்டா மூக்கழகி’ என்று செல்லப் பெயர் வைத்து சிணுங்கி வந்தார் நடிகர்.
அந்தப் படத்துக்குப் பின் மறுபடியும் மல்லிப்பூ நகரையே மையம்கொண்ட ஒரு படத்தில் நடித்தபோது இருவருக்கும் எக்கச்சக்கமாகி விட… ஷ¨ட்டிங் நேரத்திலேயே திடீர் திடீரென காணாமல் போக ஆரம்பித்தார்கள்.
அவுட்டோரில் ஒருநாள் ‘ஸ்விட்’ ரூமில் நடிகை ப்ளஸ் தாய்க்குலத்துடன் உற்சாக பானம் அருந்தியபடி சீட்டு விளையாட ஆரம்பித்தாராம் நடிகர். ஒரு கட்டத்தில் நடிகை சோர்ந்து தூங்கிப் போய்விட… நடிகரின் தகடதினா பார்வை தடம் மாறிப் பாய்ந்ததாகவும்… கொஞ்ச நேரம் கழித்து சிக்கன் பிளேட்டோடு அழைப்பு மணியை அழுத்திய ‘ரூம்பாய்’, அடுத்த கொஞ்ச நாளைக்கு பேயறைந்த மாதிரி முழித்துத் திரிந்ததாகவும் சொல்வார்கள்.
தென் மாநிலத்தின் மொழி எல்லைகளைக் கடந்து பர்சனலாக கவர்ச்சி வலை விரித்து வைத்திருக்கும் அந்த சீனியர் நடிகையுடன் ரொம்ப லேட்டாகத்தான் ஒரு படத்தில் காம்பினேஷன் வந்தது நம்ம ஹீரோவுக்கு. கேமரா முன்பு ஆக்ஷன் ஹீரோவாக சுறுசுறுப்பாக நடித்து அவ்வப்போது சீனியர் நடிகையின் ரியாக்ஷனை ஓரக்கண்ணால் அளவெடுத்தார். சீனியர்தான் எமனையே விழுங்கி ஏப்பம் விடுபவராயிற்றே… இந்தச் சின்னவரின் சில்மிஷம் புரியாதா என்ன… முதலில் ‘ஹலோ’ என்று சம்பிரதாயமாக அழைத்துக்கொண்ட இருவரும், பின்னர் ஷ¨ட்டிங் முடிந்து வீட்டுக்குப் போன பிறகும் விடிய விடிய கிரஹாம்பெல் புண்ணியத்தில் கடலை போட்டுக்கொண்டே இருந்தார்களாம். அப்புறம் இந்த இருவரையும் தனியாக காரில் பின்னரவில் பார்த்தவர்கள் உண்டு.
செக்கச் செவேலென்று மூக்கும் முழியுமாக கோலிவுட்டில் கும்மியடித்துக் கொண்டிருந்த ஒரு நடிகையோடு ஜோடியாக நடிக்க வேண்டுமென்று ரொம்ப நாளாக இவருக்கு ஆசையாம்.
ஒருசில தயாரிப்பாளர்களிடம் இதைச் சொல்லிப் பார்த்தபோது, ”அவங்க உங்களுக்கு அக்கா மாதிரி இருப்பாங்க தம்பி. ஜனங்க ஏத்துக்க மாட்டாங்க” என்று ஆசையில் மண் அள்ளிப் போட்டார்களாம்.
மனசுக்குள் இரைந்த ஜாஸ் மியூசிக்கின் அலறலை அடக்க முடியவில்லை இவரால். ‘அத்தை மகளை கட்டிக்கொள்வதற்கும், மாமன் மகனை மணமுடிக்கவும்தானே வயசு, சம்பிரதாயம் எல்லாம்.
கேமரா முன்னாடி கட்டிபிடிச்சு பாட்டுப் பாடுற கருமாந்தரத்துக்கு எதுக்கு இதெல்லாம் பாக்குறீங்க’ என்று ஒரு புதுமுக தயாரிப்பாளரை வாதாடி சம்மதிக்க வைத்தார் நடிகர்.
ஊரையே காவல் காக்கிற அந்தப் படத்தில் இருவருக்குமான கெமிஸ்ட்ரியைப் பார்க்கிறவர்களுக்கு, அது கேமராவுக்குப் பின்னாலிருந்து தொடர்கிற நெருக்கம் என்று நச்சென்று புரிந்துபோகும்!
ஒருநாள் தற்செயலாக ‘வாடா… போடா’ தோஸ்த் ஒருத்தர் ஷ¨ட்டிங் நடக்கிற ஊருக்கே ஜில்லென்று வந்து இறங்கினார். அவரோடு இவர் உற்சாக பானம், ஊர்வம்பு என்று இருந்த நேரத்தில், நடிகையின் அறை யிலிருந்து வந்த இன்டர்காம் அழைப்பு மறுபடி ஜாஸ் மியூசிக்கை அலற விட்டதாம்.
தன் அறையில் நண்பரை சிங்கிளாகத் தவிக்கவிட்டு சிறிது நேரம் காணாமல் போனாராம் இவர். திரும்பி வந்து விஷயத்தை கெக்கலிப்பாகச் சொல்ல… ”ஏண்டா வயசு பார்க்காம வழிஞ்சுகிட்டு அலையுறே?” என்று ஆரம்பித்து… அக்கறையும் பொறாமையுமாக மாறி மாறி திட்டித் தீர்த்தாராம் நண்பர்.
கடுப்பின் உச்சிக்கே போன ஹீரோ, ”டேய், அவங்களைப் பத்தி உனக்கென்ன தெரியும்?” என்று ஆரம்பித்து டென்டுல்கர் முதல் பல வி.ஐ.பி. உதாரணங்களை சம்பந்தமே இல்லாமல் தன் சப்போர்ட்டுக்கு அழைத்து சீறித் தள்ளினாராம். அந்தக் கால்சட்டைப் பிராய நண்பர் கப்சிப்பென்று சென்னைக்கு ரயில் ஏறினாராம்.
ஷ¨ட்டிங் நடக்காத இரண்டாம் ஞாயிறு… நண்பர்கள் புடைசூழ மகாபலிபுரத்தில் இருக்கும் பிரமாண்டமான ஃபார்ம் ஹவுஸில் இவரைப் பார்க்கலாம். விசாலமான நீச்சல் குளத்தில் இவர் சுறா வேகத்தில் நீந்திக்கொண்டே நகர… கரையோரம் ஒரு பேரர் குப்பியை கையில் சுமந்தபடி ஓடிக்கொண்டே இருப்பார். கைநீட்டுகிற நேரத்தில் குப்பியை நீட்டாவிட்டால்… ‘நல்ல வார்த்தை’களால் நீராட்டிவிடுவாராம் ஹீரோ!
சிட்டிக்குள்ளிருந்து காஸ்ட்லி கேர்ள்ஸ் காரில் வந்திறங்குவார்கள். அவர்களோடும் நீச்சல் தொடரும். திங்கள் அதிகாலை கண் விழித்து… அலறிப் புடைத்துக் கொண்டு வீடு திரும்புவார். ஷூட்டிங் இருந்தாலும் இல்லாவிட்டாலும்…
அங்கே இவருக்கு செமத்தியாக அர்ச்சனை காத்திருக்குமாம்.
பொதுவாக ஒப்பந்தமான படத்தில் முழுசாக நடித்து முடித்த பின்னரே பேசிய சம்பளத்தைப் பெறுவார்கள். இவரோ, சினிமா எடுக்கிற சி.டி. கம்பெனியிடம் ”எனக்கு அவசரமாப் பணம் தேவைப்படுது” என்று சொல்லியே முன்கூட்டி மொத்த சம்பளத்தையும் கறந்து விட்டாராம்.
அந்தப் படத்தின் அவுட் டோர் படப்பிடிப்புக்காகப் போனபோது செர்ரிப் பழமாகச் சிவந்திருக்கும் மைனாவுடன் ஈராக் பிரச்னை குறித்து விடிய விடிய டிஸ்கஷன் நடத்தி யிருக்கிறார்.
அப்போது, ”நீயும் ஏதாச்சும் சொல்லி மொத்த சம்பளத்தையும் முன்னாடியே வாங்கிடு” என்று ஏத்திவிட்டாராம் அந்த நடிகையிடம். ரொம்ப நாளைக்கு இவரைத் திட்டித் தீர்த்தாராம் அந்தப் படத்து தயாரிப்பு நிர்வாகி.
லேட்டஸ்டாக… பேரறிஞர் (அண்ணா நகர்) பேர் சொல்லும் ஏரியாவில் பிரபல ஜிம் ஒன்றின் கண்ணாடிச் சுவர்களுக்கு கன்னம் சிவக்கிறதாம். இந்த சினிமா பிரபலத்தோடு பேசிப் பழகுவதற்கு வி.ஐ.பி.
குடும்பத்துப் பெண்கள் சிலர் விருப்பம்கொண்டு அங்கே வருகிறார்களாம். குடும்பப் பட்சிகளை தன் கூண்டில் அடைக்கிற இவர் வேகத்தைப் பார்த்து, விஷயம் தெரிந்தவர்கள் வெலவெலத்துப் போயிருப்பதாகக் கேள்வி.
”இவ்ளோ விடியலில் வந்து எக்ஸர்ஸைஸ் பண்ற ஆளை நாங்க பார்த்ததே இல்லீங்க” என்று அந்த ஏரியா வில் அசந்து பேசுகிறார்களாம்.நடிகருக்காக கதை கேட்டு ஓகே பண்ண நிழல்மனிதர் ஒருத்தரும் உண்டு.
பேருக்கேத்த மாதிரி பேசியே மொட்டை போடுவாராம் அவர். இவர் ஓகே செய்கிற சினிமா புள்ளிகளோடு மட்டும்தான் நடிகர் நட்பு பாராட்டுகிறாராம் சமீபகாலமாக. நிழல் முதலில் கேட்டுவிட்டு ஓகே சொல்கிற கதைக்கு கால்ஷீட்டும் கொடுக்கிறாராம்.
”நிழலை நம்புறதில் தப்பில்லீங்க… அதுக்காக கண்ணை மூடிக்கிட்டு அவர் பின்னாடி போறது என்னிக்கு இருந்தாலும் ஆபத்துதான்” என்று வருந்துகிறார்கள் அக்கறையுள்ள சினிமா உலகினர்.
ஸ்டார் ஹோட்டல் பாரில் உட்கார்ந்து, அந்த நிழல் கேட்டு நிராகரித்த நல்ல கதைகள் ஏராளமாம். ”என்னய்யா இது… ஆறேழு ஹீரோவுல எங்காளும் ஒருத்தரா? இது சரிவராது” என்று சமீபத்தில் அந்த நிழல் ரிஜெக்ட் செய்த ஒரு கதை… தியேட்டர்களில் ஜம்மென்று ஓடுகிறது இப்போது.
நிழல் பேச்சையும் மீறி இவர் வளர்த்துக்கொண்ட நட்பு – தன் வயதொத்த இன்னொரு அதிவேக நடிகரோடு.அவரோடுதான் இவருக்கு நிறைய நேரம் கழிகிறது இப்போது.
நேரில் பார்த்துப் பேசுகிற நேரங்கள் போக… வில்லங்கமான எம்.எம்.எஸ்-களை பரஸ்பரம் பரிமாறிச் சிலிர்ப்பதும் இந்த நண்பர்களின் லேட்டஸ்ட் பொழுதுபோக்காம்!
‘வம்புல மாட்டாம இருந்தா சரி’ என்று கவலையோடு இவரை கண்கொட்டாமல் கவனித்துக் கொள்கிறதாம் நிழல்!
குறிப்பு : இப்பதிவு யாரையும் எவரையும் குறிப்பிடுவன அல்ல. சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் எவருடனவாது ஒத்துப் போனால், அதற்கு நான் பொறுப்பல்ல.
Tuesday, March 12, 2013
நடிகையை அபேஸ் செய்த நடிகர்
Posted by
Tamil
at
6:17 PM
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
திருடனை குறிக்கும் படத்தில் பெயிண்டிங்கைப் போல அறிமுகமான நடிகை அவர்! அந்த படத்தின் தயாரிப்பாளர் வாட்டசாட்டமாக இருப்பார். நடிகையின் கவனிப்புக...
-
இணையும் புதிய படம் கெளதம் வசம் இப்போது டஜன் கணக்கில் பட வாய்ப்புகள் உள்ளதாம். அப்படி ஒரு புதிய வாய்ப்பு ரஜினி மகள் ஐஸ்வர்யாவி...
-
சாலூர் கிராமம், 1937ல்… வறுமையை கிராமத்தை போட்டு ஆட்டுவிக்கிறது. இந்த ஊர்ல தண்டோரா போடுகிறார் ராசா. டீ எஸ்டேட்டில் நல்ல வேலை இருக்கிறது. நல்...
-
அஜீத் நடித்த வாலி, விஜய் நடித்த குஷி போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கியவர் எஸ்.ஜே.சூர்யா. அதன்பிறகு நியூ, அன்பே ஆருயிரே, வியாபாரி உள்பட சி...
-
According to the Gallery when the villain who Vimal lavvukirar. It's going to kalyanamvarai, married with 18-year-old with the condit...
-
காஜல் அகர்வாலின் கவர்ச்சி எனக்கு பிடிக்கும் - நடிகர் கார்த்தி ‘சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் என்ற பாஸ்கரன்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ ஆகிய வ...