
பிரபல காமெடி நடிகர் லூஸ் மோகன் இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 84. லூஸ்மோகன் 1000 படங்களுக்கு மேல் நடித்து உள்ளார். ரஜினிகாந்துடன் 'மூன்று முகம்', 'மாப்பிள்ளை', 'தர்மதுரை' படங்களிலும், கமலுடன் 'நானும் ஒரு தொழிலாளி' படத்திலும் நடித்துள்ளார். 'ரோஜாப்பூ ரவிக்கைகாரி' படத்தில் சிவக்குமாருடன் இணைந்து நடித்தார். பார்த்திபனுடன் 'அழகி' படத்திலும் வந்தார்.
சென்னை மயிலாப்பூர் சாலை தெருவில் உள்ள வீட்டில் மகன் கார்த்திக்குடன் வசித்து வந்தார். சில மாதங்களாக அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இன்று அதிகாலை அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. கை, கால்களும் செயல் இழந்தன.
உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது. லூஸ் மோகன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் அஞ்சலி செலுத்தினார்கள்.
இன்று மாலை உடல் இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மயிலாப்பூர் ஐ.ஜி. ஆபீஸ் பின்புறம் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது. மரணம் அடைந்த லூஸ் மோகனுக்கு ரேவதி, கீதா, லட்சுமி என்ற மகள்களும் உள்ளனர். சென்னை தமிழில் பேசி காமெடி செய்த முதல் நடிகர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment