அஜீத் நடித்த வாலி, விஜய் நடித்த குஷி போன்ற மெகா ஹிட் படங்களை
இயக்கியவர் எஸ்.ஜே.சூர்யா. அதன்பிறகு நியூ, அன்பே ஆருயிரே, வியாபாரி உள்பட
சில படங்களில் கதாநாயகனாகவும் உருவெடுத்தார். ஆனால், கடைசியாக நடித்த சில
படங்கள் தோல்வியடைந்ததால் அதன்பிறகு
அவருக்கு படம் கொடுக்க யாரும்
முன்வரவில்லை.
இதையடுத்து ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த நண்பன் படத்தில்...
மெரினா பட வழக்கில் கோர்ட்டு புது உத்தரவு மெரினா பட வழக்கில் கோர்ட்டு புது உத்தரவு மெரினா பட வழக்கில் கோர்ட்டு புது உத்தரவு சிவகார்த்திகேயன், ஓவியா ஜோடியாக நடித்த படம் மெரினா. பாண்டிராஜ் இயக்கினார். கடந்த பிப்ரவரியில் இப்படம் ரிலீசானது. இந்த படத்துக்கு எதிராக இணை தயாரிப்பாளர் பாலகிருஷ்ணன் சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-
மெரினா படத்தில் என்னை தயாரிப்பாளராக போடுவதாக பாண்டிராஜ் கூறினார். இதற்காக என்னிடம் ரூ.50 லட்சம் வாங்கினார். ஆனால் படம் ரிலீசாகும் போது எனது பெயரை தயாரிப்பாளர் என்று போடவில்லை. இதுகுறித்து சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். அங்கு இருதரப்புக்கும் சமரசம் ஏற்பட்டது. எனக்கு ரூ.50 லட்சம் தருவதாக பாண்டிராஜ் ஒப்புக்கொண்டார். லாபத்திலும் பங்கு தருவதாக கூறினார்.
ஆனால் சொன்னபடி கொடுக்கவில்லை. எனவே மெரினா படத்தின் வரவு � ��ெலவு கணக்குகளை ஆராய அட்வகேட் கமிஷனை நியமிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
வழக்கை 7-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதி சந்திர சேகரன் விசாரித்து வக்கீல் ரங்கனை அட்வகேட் கமிஷனாக நியமித்து இரு தரப்பிலும் வரவு செலவு கணக்கை விசாரித்து வருகிற 20-ந்தேதி கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
0 comments:
Post a Comment