அஜீத் நடித்த வாலி, விஜய் நடித்த குஷி போன்ற மெகா ஹிட் படங்களை
இயக்கியவர் எஸ்.ஜே.சூர்யா. அதன்பிறகு நியூ, அன்பே ஆருயிரே, வியாபாரி உள்பட
சில படங்களில் கதாநாயகனாகவும் உருவெடுத்தார். ஆனால், கடைசியாக நடித்த சில
படங்கள் தோல்வியடைந்ததால் அதன்பிறகு
அவருக்கு படம் கொடுக்க யாரும் முன்வரவில்லை.
இதையடுத்து ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த நண்பன் படத்தில் ஒரு கேரக்டரில் நடித்தார் எஸ்.ஜே.சூர்யா. அதையடுத்து இசை என்றொரு படத்தை இயக்கி நடித்து வருகிறார். இப்படத்திற்கான பரபரப்பை கூட்டும் முயற்சியாக இரண்டு இசையமைப்பாளர்கள் பற்றிய கதை என்றும் கூறி வருகிறார். ஆனால், ஒரு வருடத்திற்கு மேலாகியும் இன்னமும் வெளியாவதற்கான அறிகுறிகள் இல்லை.
இந்த நிலையில், மற்ற இயக்குனர்களின் படங்களில் கேரக்டர் ரோல்கள் கிடைத்தாலும் தொடர்ந்து நடிக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் எஸ்.ஜே.சூர்யா. அவரது முயற்சியின் பலனாக இப்போது பீட்சா 2 வில்லா என்ற படத்தில் ஒரு வேடம் கிடைத்துள்ளதாம். இதில் அவருக்கு கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டராம். இப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் தயாராவதால், இது வெற்றி பெற்றால் அடுத்து பரவலாக தென்னிந்திய மொழிப்படங்களில் நடிக்கும் முடிவில் இருக்கிறாராம் எஸ்.ஜே.சூர்யா.

0 comments:
Post a Comment