Tuesday, April 24, 2012

`தென் கைலாயம்'



கோவை செல்வபுரத்தை சேர்ந்த சதாசிவம் என்பவரை ஒரு பெரியவர் வழிமறித்து, பக்கத்தில் இருந்த ஒரு புற்றை காட்டி, ``இதில் லிங்கமும், தண்டலமும் இருக்கிறது. அதை எடுத்து வழிபடுங்கள்'' என்று கூறி மறைந்து விட்டார். அந்த பெரியவர் சொன்னபடி கோவில் கட்டி, லிங்கத்தையும், தண்டலத்தையும் அந்த பகுதி மக்கள் பல வருடங்களாக வழிபட்டு வருகிறார்கள்.

இந்த உண்மை சம்பவத்� �ை கருவாக வைத்து, `தென் கைலாயம்' என்ற படம் தயாராகிறது. புதுமுகங்கள் அகிலன்-சப்னாவுடன் மீராகிருஷ்ணன், சிங்கம்புலி, ஜெயசூர்யா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.


திருப்பதி ஒளிப்பதிவு செய்ய, தேவா இசையமைக்கிறார். பிறைசூடன், நா.முத்துக்குமார் ஆகிய இருவரும் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். புலியங்குளம் ராஜேந்திரன் எழுதிய மூலக்கதைக்கு, ஆர்.ஆர்.கிழியார் திரைக்கதை-வச னம் எழுதியிருக்கிறார். துரை கே.சாமி டைரக்டு செய்கிறார். சுயம்பு ஜலகண்டேஸ்வரர் சினி கிரியேஷன்ஸ் தயாரிக்க, இணை தயாரிப்பு: எம்.விஜயகுமார். படப்பிடிப்பு கோவை, வெள்ளியங்கிரிமலை, ஊட்டி, கொடைக்கானல் ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது.


http://fcensor.blogspot.in




0 comments:

Post a Comment

Popular Posts