
இதில், 'தூத்துக்குடி' பட புகழ் ஹரிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக புதுமுகங்கள் சஹானா, குஷ்பு, ஆதிரா ஆகிய மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரங்கள� ��ல் ராதாரவி, கலாபவன் மணி,செந்தில், தம்பி ராமயா, வையாபுரி, நெல்லை சிவா, ஒய்.எஸ்.டி. சேகர் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
கவிஞர் முத்துலிங்கம் எழுதிய பாடல்களுக்கு சபேஸ் - முரளி இசையமைக்கிறார்கள். வி. நவநீத கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.ஆர். விஜயசுகுமாரன், நசிமாபானு, முகமது அலி ஜின்னா ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.
படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டத்தை சுற்றியுள்ள ஆத்தூர் அணை, சின்னாளப்பட்டி, சுப்பிரமணியசாமி கோவில் பகுதிகளில், மின் விளக்குகளே இல்லாத குக்கிராம� ��்களில் நடைபெறுகிறது.
'தென் மாவட்டத்தையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பிரபல தாதா கலாபவன் மணிக்கும், அதே மாவட்டத்தில் உயர் போலீஸ் அதிகாரியாக இருக்கும் ஹரிகுமாருக்கும் நடக்கும் பாசப்போராட்டம்தான் இந்த படத்தின் கதையாம். 1963, 1988, 2012 ஆகிய மூன்று கால கட்டங்களில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது" என்கிறார், டைரக்டர் � ��ம்பிராஜன்.
http://tamilarai.blogspot.in
0 comments:
Post a Comment