Sunday, February 12, 2012

கோச்சடையானில் இருந்து சினேகா நீக்கம்?

 


கோச்சடையானில் ர‌ஜினியின் தங்கையாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த சினேகா அப்படத்திலிருந்து விலகியிருக்கிறார்.

கோச்சடையான் வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன. இரண்டு நாட்கள் முன்பு படத்தின் போட்டோசெஷன் நடந்தது. இதில் சினேகாவுக்குப் பதில் பொம்மலாட்டம் படத்தில் நடித்த ருக்மணி கலந்து கொண்டார். சினேகா கோச்சடையானில் நடிக்காததற்கு அவரது திருமணமே காரணம் எனப்படுகிறது.

சினேகாவுக்கும் பிரசன்னாவுக்கும் விரைவில் திருமணம் நடக்கிறது. கோச்சடையானுக்கு கேட்கப்பட்ட தேதிகளில் இவர்களின் திருமணம் குறுக்கிடும் என்பதால் படத்திலிருந்து சினேகா விலகியதாக கூறுகிறார்கள்.

மார்ச் மாதம் கோச்சடையான் படப்பிடிப்பு தொடங்குகிறது.

0 comments:

Post a Comment

Popular Posts