Tuesday, May 8, 2012

வழக்கு எண் 18/9 - வளர்ச்சிக்கான பாதை ...

 
 
 




பெரிய நடிகர்களை நம்பாமல் தன் கதையை மட்டுமே நம்பி முற்றிலும் புதுமுகங்களை வைத்து படமெடுத்து அதை ஜெயிக்கவும் வைப்பதற்கு தைரியம் மட்டும் இருந்தால் போதாது , நல்ல திட்டமிடுதலும் நிறைய திறமையும் வேண்டும் ...இவையிரண்டும் தன்னிடம் இருப்பதை மீண்டும் ஒரு முறை இயக்குனர் பாலாஜி சக்திவேல் நிரூபித்திருக்கும் படம் " வழக்கு எண் 18/9 " ...

ஆசிட் வீசப்பட்டு ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியிருக்கும் ஜோதி
( ஊர்மிளா ) என்ற வீட்டு வேலை செய்யும் பெண்ணிடம் போலிஸ்;இன்ஸ்பெக்டர் குமாரவேல் (முத்துராமன் ) மேற்கொள்ளும்;விசாரணையிலிருந்து தொடங்குகிறது படம்...

முதல் பாதியில் சந்தேகத்தின் ;பேரில் ரோட்டோர கடையில்வேலைசெய்யும் வேலு ( ஸ்ரீ ) விசாரிக்கப்பட,;இரண்டாம் பாதியில் +2 படிக்கும் வீட்டுக்கார பெண் ஆர்த்தி ( மனிஷா );கொடுக்கும் புகாரின் பேரில் தினேஷ் ( மிதுன் ) என்ற +2 படிக்கும் பணக்கார பையன் விசாரிக்கப்ப்டுகிறான் ...சட்டம் பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்குமிடையே எப்படி தன் கடமையை எப்படி செய்கிறது என்பதை;காதல் , காமம் , நட்பு , துரோகம் இவற்றையெல்லாம் சரியான விகிதத்தில் கலந்து சமூக அக்கறையுடன் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ...



ஸ்ரீ விளிம்பு நிலை இளைஞனாக அப்படியே பொருந்துகிறார்.இவர்;சம்பந்தப்பட்ட ஆரம்ப காட்சிகள் கொஞ்சம் அழுகையாய் இருந்தாலும் ;அழுத்தமாய் இருக்கின்றன ...இவர் ஊர்மிளாவை ஒரு தலையாய் காதலிப்பதாலோ என்னவோ இவர் மேல் வரும் பச்சாதாபம் இவர் காதல்;மேல் வரவில்லை ...படம் முழுவதும் வீட்டு வேலை செய்யும் பெண்ணாக;சாதாரணமக வந்து போகும் ஊர்மிளா கிளைமாக்ஸ் காட்சியில் கண்கலங்க;வைக்கிறார் ...இவர் அம்மாவாக நடித்திருக்கும் வயதான பெண்மணி ;கவனத்தை ஈர்க்கிறார் ...



மனிஷா , மிதுன் இருவரும் ட்ரையான முதல் பாதியிலிருந்து கலகலப்பான இரண்டாம் பாதிக்கு நம்மை அழைத்து செல்கிறார்கள் ...ஆசையும் ,பயமும் கலந்த மிடில் கிளாஸ் பெண்ணையும் , பெண்ணாசை பிடித்து அலையும் பணக்கார பையனையும் மனிஷா ,மிதுன் இருவரும் நம் கண் முன்னே நிறுத்துகிறார்கள் ...

எங்கே பிடித்தார்கள் என்று தெரியவில்லை , இன்ஸ்பெக்டராக வரும்;முத்துராமனின் நடிப்பு அவ்வளவு அழகாக இருக்கிறது ...இவர் மட்டுமல்ல ;விபச்சார பெண் ,ரோட்டோர கடை ஓனர் , கூத்துக்கார சிறுவன் , மிதுனின் அம்மா , மனிஷாவின் தோழி இப்படி நிறைய பேர் தங்கள் இயல்பான ;நடிப்பால் படம் பார்க்கிறோம் எனற உணர்வையே மறக்கடிக்கிறார்கள் புதுமுகங்களை இவ்வளவு இயல்பாக நடிக்க வைத்தற்க்கே இயக்குனருக்கு;ஒரு விழா எடுக்கலாம் ...
 
படத்தின் இயல்பு மாறாமல் டிஜிட்டலில் எடுத்திருக்கும் விஜய் மில்டனின் ஒளிப்பதிவு அருமை ...புதுமுக இசையமைப்பாளரி பிரசன்னாவின் இசையில்;வாத்தியமே இல்லாத இரண்டு பாடல்களும் ,பின்னணி இசையும் சூப்பர் ...
 
 
தினசரி பத்திரிக்கைகளில் படிக்கும் சம்பவங்களின் பின்னணியில் தொடுக்கப்பட்ட கதை , படத்தோடு நம்மை ஒன்ற செய்யும் திரைக்கதை , அனைவரின் நடிப்பு , ஆங்காங்கே வைக்கப்பட்ட சிம்பாலிக் ஷாட்கள் , பள்ளி மாணவ மாணவிகள் செக்ஸ் ஆசைகள் மூலம் மொபைலை தவறாக பயன்படுத்தும் விதத்தை அபாய கோட்டை தாண்டாமல் தரமாக சொன்ன விதம் , ராம் , விருமாண்டி ஸ்டைலில் இருவரின் பார்வையிலிருந்து கதையை சொன்னாலும் கன்டினுட்டி மாறாமல் சொன்ன நேர்த்தி இவையெல்லாம் வழக்கு எண்னை வழக்கமான சினிமாவிலிருந்து வித்தியாசப்படுத்துகின்றன ...;
 
நீளமாக விவரிக்கப்படும் ஆரம்ப காட்சிகள் ,செல்போனால் தன்னை படம்பிடிப்பது கூட தெரியாமல் பழகிக் கொண்டிருக்கும் மனிஷாவின்;கதாபாத்திரம் ,தப்பு செய்தவன் தண்டனை அனுபவிக்க வேண்டுமென்ற ரசிகனின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்காக வைக்கப்பட்டது போன்ற கிளைமாக்ஸ் இது மாதிரியான சில குறைகள் இருந்தாலும் கதைக்காக உலக டி.வி.டி க்களை தேடி அலையாமல் நம்மை சுற்றி நடக்கும் சம்பவங்களை ;வைத்தே உலக சினிமாவை கொடுக்க முடியுமென்ற நம்பிக்கையை ;கொடுத்திருக்கும் வழக்கு எண் 18/9 நிச்சயம் வளர்ச்சிக்கான பாதை ...
 
ஸ்கோர் கார்ட் : 45

0 comments:

Post a Comment

Popular Posts