Monday, April 30, 2012

7 விருதுகளைப் பெற்றது "வாகைசூடாவா" ! நார்வே திரைப்பட விருதுகள் - 2017




சற்குணம் இயக்கிய வாகை சூட வா படத்திற்கு 7 விருதுகள் கிடைத்திருக்கிறது.3 வது நார்வே திரைப்பட விழாவில் இந்த விருதுகளைப் பெற்றது இப்படம். உலகளவில் நடத்தப்படும் ஒரே திருவிழாவான நார்வே திரைப்பட விழா கடந்த 25ம் தேதி முதல் 29ம் தேதி வரை நார்வேயின் ஆஸ்லோ நகரில் நடந்து வந்தது.

விழாவில் 10 படங்களும்(Movies), 20 குறும்படங்களும்(short films) தேர்வாகி லொரன்ஸ்கூவில� � உள்ள திரையரங்கில் திரையிடப்பட்டது. இதில் 20 குறும்படங்களில் 5 குறும்படங்களுக்கு விருதுகள் 28ம் தேதி அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் விழாவின் இறுதிநாளில் பெரிய படங்களுக்கு விருதுகளும், வண்ண‌மையான கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. இந்த விழாவை காண ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தனர். ரசிகர்களின் பலத்த கைத்தட்டல்களுக்கு இடையில், தமிழ் சினிமாவுக்கான விருதுகள் அறிவிக்கப� �பட்டன.


vagai sudava tamil movie
இதில் சிறந்த நடிகருக்கான விருது அவன் இவன் படத்தில் நடித்த விஷாலுக்கும், போராளி படத்தில் நடித்த சசிகுமாருக்கும் கிடைத்தது. சிறந்த நடிகைக்கான விருது மயக்கம் என்ன படத்திற்காக ரிச் சா கங்கோபாத்யாயேக்கு கிடைத்தது. மேலும் வாகை சூட வா படத்திற்கு சிறந்த படம், சிறந்த இயக்குநர் உள்ளிட்ட 7 பிரிவுகளில் விருது கிடைத்தது.

தமிழ் படங்களுக்கான விருது விபரங்கள்(Award Information for Tamil films)

வாகை சூட வா - சிறந்த படம், இயக்குநர், பின்னணி பாடகி(சின்மயி), நடனம், கலை, உடை அலங்காரம், மேக்கப் உள்ளிட்ட 7 பிரிவுகளில் விருது கிடைத்தது.

அழகர்சாமியின் குதிரை - சிறந்த திரைக்கதை(Be st Screenplay)(சுசீந்திரன்), சிறந்த இசை(Best Music)(இளையராஜா), சிறந்த துணை நடிகர்(Best Supporting Actor)(அப்புக்குட்டி), சிறந்த தயாரிப்பு(Best Product) நிறுவனம்(Escape Artist Motion Pictures) ஆகிய 4 பிரிவுகளில் விருது கிடைத்தது.

உச்சிதனை முகர்ந்தால் - சிறந்த கதை(Best Story)(புகழேந்தி தங்கராஜ்), சிறந்த பாடல்(காசி ஆனந்தன்) ஆகிய இரு பிரிவுகளில் விருது கிடைத்தது

சிறந்த நடிகர் (Best Actor)- விஷால் (அவன் இவன்), சசிகுமார் (போராளி)

சிறந்த நட� ��கை(Best Actress) - ரிச்சா கங்கோபாத்யாயே (மயக்கம் என்ன)

சிறந்த துணை நடிகை(Best Supporting Actress) - தேவதர்ஷினி (மகான் கணக்கு)

சிறந்த ஒளிப்பதிவு(Best Cinematography) - ரிச்சர்ட் எம் நாதன் (கோ)

சிறந்த வில்லன் (best villan)- சம்பத் (வர்ணம் மற்றும் ஆரண்ய காண்டம்)

சிறந்த காமெடி(best comedy) - கஞ்சா கருப்பு (போராளி), சூரி (போராளி)

சிறந்த பின்னணி பாடகர் - சத்யா (எங்கேயும் எப்போதும்)

சிறந்த எடிட்டிங் - கோலா பாஸ்கர் (மயக்கம் என்ன)


சிறப்பு விருதுகள் (Special Awards): வெங்காயம், நர்த்தகி, பாலை, வர்ணம் போன்ற படங்களுக்கு சிறந்த சமூக விழிப்புணர்வு படங்களுக்கான சிறப்பு விருதுகள் அளிக்கப்பட்டன. மேலும் தமிழ் பண்பாட்டை முன்னிறுத்தும் படத்துக்கான சிறப்பு விருது கவுரவ் இயக்கிய தூங்கா நகரம் படத்துக்கு வழங்கப்பட்டது.

விழாவின் இறுதிநாளில் பின்னணி பாடகர்கள்(singers) சாருலதா மணி, ஸ்ரீமதுமிதா, ப ிரபா பாலகிருஷ்ணன் உள்ளிட்டவர்களின் இன்னிசை கச்சேரியும் நடந்தது. இந்த விழாவில் டைரக்டர்கள் சற்குணம், கவுரவ், நடிகை ரிச்சா,, இசையமைப்பாளர் சுந்தர்.சி.பாபு, ஆவணப்பட டைரக்டர் சுபாஷ் கலியன், புன்னகைப்பூ கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



http://thehotstills.blogspot.com




0 comments:

Post a Comment

Popular Posts