ஸ்னேகா அக்கா கர்ப்பம்
நட்சத்திர தம்பதியான ஸ்னேகா- பிரசன்னாவிற்கு ப்ரமோசன் கிடைத்திருக்கிறது.
அதுதாங்க ஸ்னேகா இப்போ கர்ப்பமாக இருக்கிறார். கடந்த ஆண்டு மே மாதம்
ஸ்னேகா- பிரசன்னா திருமணம் நடைபெற்றது.
இதனையடுத்து தலை ஆடி, தலை தீபாவளி, பொங்கல் என இந்த ஜோடி பற்றி செய்திகளை
போட்டு அலுத்துப் போன ஊடகங்களுக்கு சுவாரஸ்யமான தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
ஸ்னேகா கர்ப்பம் என்பதுதான் அது.
திருமணத்திற்கு பின்னர் ஜோடியாக விளம்பரங்களில் நடித்த நட்சத்திர தம்பதிகள்
எதிர்காலத்தில் குழந்தையோடு நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஸ்னேகா கர்ப்பம் என்று தெரிந்த உடனே தனி கவனிப்பு தானாம். இதனால் கடை
திறப்பு, விளம்பரம் போன்றவற்றில் கலந்து கொள்வதை குறைத்துக்கொள்ளச்
சொல்லிவிட்டார்களாம்.
புதுப் பெண்ணாக இருந்த ஸ்னேகா நகைக்கடை, சாம்பார் பொடி, சப்பாத்தி மாவு
போன்ற விளம்பரங்களில் நடித்து வந்தார். கூடவே அவர் கணவர் பிரசன்னாவிற்கு
வாய்ப்பு கிடைத்தது. கர்ப்பிணியானதால் இனி எந்த மாதிரி விளம்பரங்களில்
நடிக்க வைக்கலாம் என்று இப்போதே யோசிக்கத் தொடங்கிவிட்டனர்.
கர்ப்பமாக இருக்கும் போது கர்ப்பிணிகளுக்கு ஏற்ற சத்துமாவு, உடைகள்
விளம்பரத்தில் நடிக்க வைக்கலாமா என்று யோசிக்கும் விளம்பர நிறுவனங்கள்
பாப்பா பிறந்த உடனே எங்க நிறுவனத்தில் நடிக்க வைக்கணும் என்று அக்ரிமென்ட்
போடாத குறையாக நிற்கின்றனராம்.
0 comments:
Post a Comment