
கேரளாவில் புதிய மலையாள படம் ஒன்றின் படப்பிடிப்பில் இருந்தபோது நடிகர் திலகனுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அவரை படப்பிடிப்பு குழுவினர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
உடல்நலம் சற்று தேறிய நிலையில் வீடு திரும்பிய அவர் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். மூச்சு திணறலும் ஏற்பட்டது. இதனால் அவருடைய மகன் ஷோபி திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நடிகர் திலகனை சேர்த்தார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் உடல்நிலை கவலைக்கிடமானது.
இதையடுத்து சிறப்பு டாக்டர்கள் குழு 24 மணி நேரமும் கண்காணித்தும் வெண்டிலேட்டர் கருவி மூலம் சுவாச பயிற்சி அளித்தனர். இதனை தொடர்ந்து உடல்நிலை தேறியது. மேலும் சுயநினைவு திரும்பிய நிலையில் உறுவினர்களை அடையாளம் கண்டு கொண்டார். தொடர்ந்து அவர் நடித்த படங்களின் வீடியோ காட்சிகள் போட்டு காண்பிக்கப்பட்டன. அதையும் பார்த்து ரசித்தார்.
இவ்வாறு உடல்நிலை தேறிய திலகனுக்கு நேற்று முதல் மீண்டும் திடீர் என உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. கடும் மூச்சு திணறலால் அவதிப்பட்ட அவருக்கு உடனடியாக டாக்டர்கள் நவீன மருத்துவ உயிர் காப்பு உபகரணங்களை பயன்படுத்தி சிகிச்சை அளித்தனர். ஆனால் இதய துடிப்பு சீரான நிலையில் இயங்காததால் தொடர்ந்து தீவிரமாக சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருடைய நிலைமை மீண்டும் கவலைக்கிடமாகி உள்ளதால் டாக்டர்கள் குழு திலகன் உயிரை காப்பாற்ற போராடி வருகிறது.
0 comments:
Post a Comment