அமெரிக்காவுக்கு குழந்தையுடன் சென்ற ஐஸ்வர்யாராயை ரசிகர்கள் சூழ்ந்தனர்

ஐஸ்வர்யாராய், அபிஷேக் பச்சன் தம்பதிக்கு பிறந்த பெண் குழந்தைக்கு ஆரத்யா என பெயரிட்டுள்ளனர். இக்குழந்தையை பத்திரிக்கையாளர்கள் போட்டோ எடுக்க இதுவரை அனுமதிக்கப்படவில்லை. பொது இடங்களில் குழந்தை முகத்தை முடியே கொண்டு சென்றனர்.
குழந்தை வளர்ப்பில் மும்முரமாய் இருந்த ஐஸ்வர்யாராய்க்கு உடல் எடையும் கூடிவிட்டது. தற்போது அமெரிக்காவுக்கு ஐஸ்வர்யாராய் குழந்தையுடன் சென்ற போது விமான நிலையத்தில் குழந்தை படத்தை போட்டோகிராபர்கள் படம் எடுத்து வெளியிட்டு விட்டனர்.
அபிஷேக்பச்சன் சிக்காக்கோவில் 'டூம் 3' படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறார். அவரை பார்ப்பதற்காக ஐஸ்வர்யாராய் மும்பையில் இருந்து விமானத்தில் புறப்பட்டு நியூயார்க் சென்றார். அப்போது இரு விமான நிலையங்களிலும் ஐஸ்வர்யாராயையும் குழந்தையையும் காண ரசிகர்கள் சூழ்ந்தனர். பாதுகாவலர்கள் ஐஸ்வர்யாராயை பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
0 comments:
Post a Comment