அனுஷ்காவை நாய் கடித்தது: 3 நாள் ஊசி போட்டார் அனுஷ்காவை நாய் கடித்தது: 3 நாள் ஊசி போட்டார்

விஜய்யுடன் 'வேட்டைக்காரன்', சூர்யாவுடன் 'சிங்கம்', சிம்புவுடன் 'வானம்', விக்ரமுடன் 'தெய்வத்திருமகன்', ஆகிய படங்களில் நடித்தவர் அனுஷ்கா. தற்போது செல்வராகவன் இயக்கும் 'இரண்டாம் உலகம்' மற்றும் 'தாண்டவம்' படங்களில் நடித்து வருகிறார்.
'இரண்டாம் உலகம்' படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. வெளிநாட்டில் காடுகளில் இதன் படப்பிடிப்பு நடந்தது. அப்போது அனுஷ்கா தங்க வசதியின்றி மிகவும் கஷ்டப்பட்டு நடித்தார். படத்தின் கதாநாயகன் ஆர்யாவும், செல்வராகவனும் அனுஷ்காவின் மேல் அனுதாபப்பட்டனர்.
இதையடுத்து படப்பிடிப்பு முடிந்த பின் அனுஷ்காவுக்கு செல்வராகவன் விசேஷ விருந்து கொடுத்தார். நட்சத்திர ஓட்டலில் இந்த விருந்து நடந்தது. 'இரண்டாம் உலகம்' படத்தில் நடித்த இதர நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்களும் விருந்தில் பங்கேற்றார்கள்.
அப்போது விருந்தில் சாப்பிட்ட ஒருவர் கையை துடைத்து டிஸ்யூ பேப்பரை வீசி எறிந்தார். அதை ஒரு நாய் கவ்வி எடுத்து தின்றது. அனுஷ்கா விரைந்து போய் நாய் வாயில் கையை விட்டு பேப்பரை வெளியே எடுக்க முயன்றார். அப்போது நாய் அவர் கையை கடித்தது. அவர் வலியால் துடித்தார். உடனடியா க அனுஷ்காவை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து மூன்று நாட்கள் நாய் கடிக்காக அனுஷ்காவுக்கு ஊசி போடப்பட்டது
0 comments:
Post a Comment