Sunday, January 15, 2012

நடுரோட்டில் ஆட்டம் போட்ட விமல்

டைரக்டர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வெற்றி பெற்ற பசங்க படத்தின்
மூலம் பேசப்பட்ட நடிகர் விமல், பாண்டிராஜின் புதிய படமான மெரினாவுக்காக
நடுரோட்டில் ஆட்டம் போட்டுள்ளார். பசங்க புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில்
படத்தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருக்கும் டைரக்டர் பாண்டியராஜ்,
மெரினா படத்தை தயாரித்து இயக்குகிறார். முழுக்க முழுக்க மெரினா
கடற்கரையையும், அங்கு சுற்றித்திரியும் சிறுவர்களைப்பற்றியுமானது
இப்படத்தின் கதை. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவை மெரினா
கடற்கரையிலேயே நடத்தினார் பாண்டிராஜ்.
தனது புதிய படம் பற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், பசங்க புரொடக்ஷன்ஸ்
என்ற பெயரில் படக்கம்பெனி தொடங்கி மெரினா படத்தை நானே தயாரிக்கிறேன்.
வெறும் ஒரு லட்சம் ரூபாயை வைத்துக் கொண்டு தயாரிப்பில் இறங்கி விட்டேன்.
திரை மறைவில் நிறைய பேர் உதவுகிறார்கள். மெரினா
படத்தில்சிவகார்த்திகேயன், ஓவியா ஜோடியாக நடிக்கின்றனர். மெரினா
கடற்கரையில் திரியும் சிறுவர்கள் பற்றிய கதை. ஒவ்வொரு குழந்தைக்கும்
கல்வி முக்கியம் என்பதை படத்தில் வலியுறுத்தியுள்ளேன்.
பட்டினப்பாக்கத்தில் இருந்து காசிமேடு வரை கடற்கரை பகுதியில்படப்பிடிப்பு
நடத்தி உள்ளோம். வணக்கம் வாழ வைக்கும் சென்னை… எனத் தொடங்கித் தொடரும்
பாடலை வித்தியாசமாக எடுத்துள்ளோம். விக்ரம் பாடி கொடுத்தார். விமலை
ரோட்டில் ஆட வைத்து எடுத்தோம். சசிகுமார், சினேகா போன்றோரும் ஆடி
உள்ளனர்.
என்னை பந்தா இயக்குனர் என்று விமர்சிக்கிறார்கள். மூன்று படங்கள்
எடுத்தும் இப்போதும் பைக்கில்தான் வருகிறேன். நான் பந்தா செய்வது இல்லை.
இன்னும் பத்து படங்கள் இயக்கினாலும் பசங்க படத்தில் இருந்த
மாதிரியேஇருப்பேன். எவ்வளவு புகழ் வந்தாலும் எனக்கு பந்தா வராது.
வெயிலில் தொப்பிகூட போடாமல் தான் படப்பிடிப்பை நடத்துகிறேன், என்று
கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

Popular Posts