நடிகை ஓவியாக இயற்கையிலேயே ரொம்ப அழகு என்று டைரக்டர் பாண்டிராஜ்
கூறியுள்ளார். பசங்க, வம்சம் படங்களைத் தொடர்ந்து டைரக்டர் பாண்டிராஜ்
இயக்கியிருக்கும் புதிய படம் மெரினா. முழுக்க முழுக்க சென்னை கடற்கரை
சிறுவர்களின் பின்னால் உள்ள கதைதான் இப்படத்தின் மொத்தகளமும்.
படத்தின் நாயகனாக சின்னத்திரை புகழ் சிவகார்த்திகேயனும், நாயகியாக நடிகை
ஓவியாவும் நடித்துள்ளனர். ஓவியா பற்றி பாண்டிராஜ் அளித்துள்ள பேட்டியில்,
"ஓவியா பொதுவாகவே மேக்கப் பிரியை. எப்போதும் மேக்கப் மயம்தான். என்
படங்களின் ஹீரோயின்களுக்கு மேக்கப் போட விடவே மாட்டேன். ஓவியா
இயற்கையிலேயே அழகானவர்தான். பெண்கள் இயற்கையிலேயே அழகானவர்கள்.
அவர்களுக்கு மேக்கப் அவசியமில்லை. ஆனால் இந்தப் படத்துக்காக
விட்டுவிட்டேன். என்று கூறியுள்ளார்.
Sunday, January 15, 2012
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment