பெரிய நடிகர்கள் படங்கள் தியேட்டர்களை ஆக்கிரமிப்பதால் சிறு பட்ஜெட்
படங்கள் முடங்கி கிடக்கின்றன. 200-க்கும் மேற்பட்ட சிறு படங்களின்
தயாரிப்பாளர்கள் தியேட்டர்கள் கிடைக்காமல் தவிப்பில் உள்ளனர். பண்டிகை
நாட்களிலும் மற்ற தினங்களிலும் பெரிய பட்ஜெட் படங்களையே
தியேட்டர்காரர்கள் திரையிடுகின்றனர்.
ஒரே படம் நிறைய தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. அது தூக்கப்பட்டதும்
இன்னொரு பெரியபடம் தியேட்டர்களை பிடித்துக் கொள்கிறது. சிறு பட்ஜெட்
படங்களின் இத்தகு சிரமங்களை போக்க தயாரிப்பாளர் சங்கம் அதிரடி நடவடிக்கை
மேற்கொண்டு உள்ளது.
5 பண்டிகைகளில் மட்டுமே பெரிய நடிகர்கள் படங்களை ரிலீஸ் செய்ய வேண்டும்
என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளர்
சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் மாலைமலர் நிருபரிடம் கூறும் போது
சிறுபட்ஜெட் படங்களுக்கு தியேட்டர் கிடைக்காத நிலையை போக்க பெரிய
நடிகர்கள் படங்களை ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு , மே1 தொழிலாளர் தினம் ,
ஆகஸ்டு 15 சுதந்திர தினம் , தீபாவளி மற்றும் பொங்கல் ஆகிய 5 பண்டிகை
தினங்களில் மட்டுமே ரிலீஸ் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து உள்ளோம்.
இதன் மூலம் சிறு பட்ஜெட் படங்களுக்கு மற்ற நாட்களில் தாராளமாக
தியேட்டர்கள் கிடைக்கும் என்றார்.