Showing posts with label டைரக்‌ஷன். Show all posts
Showing posts with label டைரக்‌ஷன். Show all posts

Tuesday, February 19, 2013

இனி டைரக்‌ஷன் மட்டும் தான் : தயாரிப்பு நிறுவனத்திலிருந்து விலகினார் டைரக்டர் பிரபு சாலமன் !

ரே நேரத்தில் படத்தை தயாரித்து, டைரக்‌ஷன் செய்வது மிகவும் கஷ்டமாக உள்ளது. அதனால் இனி படங்களை தயாரிக்கப் போவதில்லை, தொடர்ந்து டைரக்‌ஷன் மட்டுமே செய்வேன் என்று டைரக்டர் பிரபு சாலமன் திடீரென்று அறிவித்துள்ளார்.

மைனா என்ற படத்தை தனது நண்பர் ஜான் மேக்ஸ் உடன் ‘ஷாலோம் ஸ்டுடியோஸ்’ நிறுவனத்தின் மூலம் இணைந்து தயாரித்தார் பிரபு சாலமன். அந்தப் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அதே நிறுவனத்தில் அடுத்து சமுத்திரக்கனி நடித்த ‘சாட்டை’ என்ற படத்தையும் தயாரித்தார்.
இரண்டு படங்களும், அவருக்கு நல்ல பெயர்களையும், பணத்தையும் சம்பாதித்துக் கொடுத்த வேலையில் இப்போது திடீரென்று தயாரிப்பு நிறுவனத்திலிருந்து விலகிக் கொள்வதாக கூறியிருக்கிறார் அவர்.
இதுகுறித்து பிரபு சாலமன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது : “ஒரே நேரத்தில் தயாரித்து இயக்குவது கஷ்டமாக உள்ளது. அதனால்தான் ஷாலோம் ஸ்டுடியோவிலிருந்து விலகிவிட்டேன். இனி ஜான் மேக்ஸ் மட்டுமே அந்த நிறுவனத்தில் இருப்பார். எனது அடுத்த படம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடுவேன்”
இவ்வாறு கூறியிருக்கிறார்.

Popular Posts