Showing posts with label அஜித். Show all posts
Showing posts with label அஜித். Show all posts

Wednesday, March 6, 2013

அஜித்துடன் ஜோடி நீது சந்திரா

அமீரின் ஆதி-பகவனை ரொம்பவே நம்பியிருந்த நீதுவுக்கு அந்தப்படம் பாதாள குழிக்குள் இறக்கி விட்டது. எங்கே இப்படியே போனால் தமிழ்சினிமாவை விட்டே நாம் வெளியே போக வேண்டிய சூழ்நிலை வந்து விடுமோ? என்று பயந்து போயிருக்கிறார்.
ஆனால் புதிய பட வாய்ப்புகள் கிடைத்தாலும் சரி கிடைக்காவிட்டாலும் சரி அஜித்துடன் மட்டும் ஒரே ஒரு படத்தில் ஜோடி சேர்ந்து விட வேண்டும் என்று துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறாராம் நீது.

இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது : “அஜித் சாரின் தீவிரமான ரசிகை நான். அவருடைய படங்களை மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையில் அவருடைய நல்ல நடத்தைகள் எல்லோருக்கும் முன்னுதாரணமாக இருப்பவை.

அப்படிப்பட்டவருடன் ஒரு படத்திலாவது ஜோடி சேர்ந்து விட வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. அவருடன் இணைந்து நடிக்க நான் காத்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் அவருடன் ஒரு படத்தில் ஜோடியாக நடிப்பேன் என்றும் கூறியிருக்கிறார் நீது சந்திரா.
முன்னதாக அஜித்தின் ‘மங்காத்தா’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க நீதுவுக்கு சான்ஸ் வந்தது. ஆனால் கடந்த 2010 ஆம் ஆண்டில் இங்கிலாந்து, பாகிஸ்தான் இடையே நடந்த டெஸ்ட் போட்டியின் போது நீது சந்திரா கிரிக்கெட் சூதாட்ட மோசடியில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகின.

இதனால் டைரக்டர் வெங்கட்பிரபு ‘மங்காத்தா’ படத்திலிருந்து நீதுவை தூக்கி விட்டு த்ரிஷாவை அஜித்துக்கு ஜோடியாக்கினார்

Popular Posts