Saturday, November 3, 2012

பிராமணர்கள் பற்றி அவதூறு: ஹன்சிகா படத்தை எதிர்த்து போராட்டம்!

பிராமணர்கள் பற்றி அவதூறு: ஹன்சிகா படத்தை எதிர்த்து போராட்டம்!
hansika_photoshoot_20120808_1206066462
ஹன்சிகா நடித்த 'தேனி கைனா ரெடி' என்ற தெலுங்கு படத்துக்கு எதிராக ஆந்திராவில் போராட்டம் வலுத்துள்ளது. இந்த படம் கடந்த வாரம் ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் ஹன்சிகா ஜோடியாக தெலுங்கு நடிகர் மோகன்பாபு மகன் விஷ்ணு மஞ்சு நடித்துள்ளார். மோகன்பாபுவே இப்படத்தை தயாரித்து உள்ளார். நாகேஸ்வர ரெட்டி இயக்கியுள்ளார். ரூ.5 கோடி செலவில் எடுத்துள்ளனர்.
இந்த படத்தில் பிராமண சமூகத்தினரை அவதூறு செய்வதுபோல் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதையடுத்து அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் படத்தை தடை செய்யக்கோரி போராட்டத்தில் குதித்துள்ளனர்.
ஐதராபாத்தில் உள்ள மோகன்பாபு வீட்டு முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது. மோகன்பாபுவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பினர். அப்போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும்,மோகன்பாபு பாதுகாவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாக்கப்பட்டனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள். பிராமின் சேவாசமிதி என்ற அமைப்பு மோகன்பாபுவையும், அவரது குடும்பத்தினரையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போலீசில் புகார் செய்துள்ளது. ஆந்திரா முழுவதும் இப்படத்தை திரையிட தடைவிதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மோகன்பாபு மற்றும் நடிகர் விஷ்ணுமஞ்சு ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவது குறித்து மோகன்பாபு ஆலோசனை நடத்தி வருகிறார்.
சினிமாவில் பிராமணர்களை இழிவுபடுத்தும் காட்சி: நடிகர் விஷ்ணு மஞ்சு மீது செருப்பு வீச்சு!
பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாவுவின் மகன் விஷ்ணுமஞ்சு நடித்த தேனிகைனா ரெடி என்ற படம் சமீபத்தில் ரிலீஸ் ஆனது. இதில் பிராமணர்களை இழிவுபடுத்தும் காட்சி இருப்பதாக குற்றம் சாட்டி பிராமணர்கள் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் பிராமணர் சமூக இளைஞர்கள் சுமார் 50 பேர் நேற்று முன்தினம் இரவு ஐதராபாத்தில் உள்ள மோகன்பாபு வீட்டுக்கு சென்று கோஷமிட்டபடி வீட்டை கல்வீசி தாக்கினார்கள். இதில் வீட்டு ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து கதவையும் உடைக்க முயன்றனர்.
உடனே காவலாளிகள் அவர்களை உருட்டு கட்டையால் தாக்கி விரட்டியடித்தனர். இதில் 2 பேர் காயம் அடைந்தனர். நேற்று பிராமணர்கள் சங்கத்தினர் ஐதராபாத்தில் உள்ள மனித உரிமை கமிஷன் அலுவலகத்துக்கு வந்தனர்.
நடிகர் விஷ்ணு மஞ்சு மீது அவர்கள் புகார் கொடுத்தனர். இதையடுத்து மனித உரிமை கமிஷனர் இது பற்றி விசாரணை நடத்தி வருகிற 28-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி போலீஸ் கமிஷனர் அனுராக்சர்மாவுக்கு நோட்டீசு அனுப்பினர்.
இதற்கிடையே தனது வீடு மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது புகார் கொடுக்க நடிகர் விஷ்ணு மஞ்சுவும் மனித உரிமை கமிஷன் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அங்கு கூடிநின்ற பிராமணர்கள் நடிகர் விஷ்ணுவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மேலும் விஷ்ணு மீது செருப்பு வீசினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உடனே போலீசார் தலையிட்டு விஷ்ணுவை பாதுகாப்பாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இதுபற்றி நடிகர் விஷ்ணு கூறும்போது எங்கள் வீட்டை தாக்கியவர்களை காவலாளி தடு¢தார்களே தவிர யாரையும் தாக்கவில்லை. என்றார்.
விஷ்ணுவுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மோகன்பாபு வீட்டில் நடக்கும் சுபகாரியங்களுக்கு செல்லமாட்டோம் என்று பிராமணர்கள் சங்கம் அறிவித்து உள்ளது.

Popular Posts