Monday, October 1, 2012

சுவிட்சர்லாந்தில் ஹன்சிகாவிடம் கொள்ளை: பணம், ஐ போனை பறித்துச் சென்றனர்



சுவிட்சர்லாந்தில் ஹன்சிகாவிடம் கொள்ளை: பணம், ஐ போனை பறித்துச் சென்றனர் சுவிட்சர்லாந்தில் ஹன்சிகாவிடம் கொள்ளை: பணம், ஐ போனை பறித்துச் சென்றனர்

'எங்கேயும் காதல்' படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஹன்சிகா. விஜய்யுடன் 'வேலாயுதம்', உதயநிதியுடன் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' ஆகிய படங்களில் நடித்தார்.

தற்போது 'சேட்டை', 'வாலு', 'வேட்டை மன்னன்', 'சிங்கம்-2' படங்களில் நடித்து வருகிறார். 'சேட்டை' படத்துக்காக ஆர்யா ஹன்சிகா ஆடிப்பாடும் டூயட் பாடல் காட்சியோன்று சுவிட்சர்லாந்தில் படமாக்கப்பட்டது.

இதில் நடித்துக்கொண்டிருந்த போது ஹன்சிகாவின் கைப்பை திருட்டு போனது. மர்ம நபர் அந்த பையை பறித்துக்கொண்டு ஓடிவிட்டான். பைக்குள் விலை உயர்ந்த ஐ-போன், ஐ-பாட், உயர் ரக மேக்கப் பொருட்கள் சுவிட்சர்லாந்து நாட்டு பிராங்க் (பணம்), அமெரிக்க டாலர் போன்றவை இருந்தன. ஷாப்பிங் செலவுக்காக அவற்றை வைத்து இருந்தார். எல்லாம் பறிபோய்விட்டது.

இதனால் ஹன்சிகா அதிர்ச்சியாகி கண்கலங்கினார். இந்த திருட்டு குறித்து அங்குள்ள போலீசில் புகார் செய்தார். படிப்பிடிப்பு முடிந்து விமானத்தில் இந்தியா புறப்படுவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பாக இந்த திருட்டு நடந்தது.

இதுகுறித்து ஹன்சிகா கூறும்போது, திருட்டு போன பையில் எனது கம்ப்யூட்டர் சாதன பொருட்கள் இருந்தன. அவற்றில் எனது தனிப்பட்ட படங்கள், சினிமா தொடர்பான ஸ்கிரிப்ட் போன்றவை இருந்தன. அவை தொலைந்ததால் பெரும் அதிர்ச்சியாகியுள்ளேன் என்றார்.

ஒட்டிப்பிறந்த இரட்டையராக நடிகர் சூர்யாவை நடிக்க வைத்தது எப்படி?: இயக்குனர் கே.வி.ஆனந்த்



ஒட்டிப்பிறந்த இரட்டையராக நடிகர் சூர்யாவை நடிக்க வைத்தது எப்படி?: இயக்குனர் கே.வி.ஆனந்த் ஒட்டிப்பிறந்த இரட்டையராக நடிகர் சூர்யாவை நடிக்க வைத்தது எப்படி?: இயக்குனர் கே.வி.ஆனந்த்

'மாற்றான்' படத்தில் சூர்யா ஒட்டிப் பிறந்த இரட்டையராக நடித்துள்ளார். வருகிற 12-ந்தேதி இப்படம் ரிலீசாகிறது. இதில் சூர்யாவை நடிக்க வைத்த அனுபவங்கள் பற்றி படத்தின் இயக்குனர் கே.வி.ஆனந்த் கூறியதாவது:-

'மாற்றான்' படத்தில் ஒட்டிப் பிறந்த இரட்டையராக சூர்யா கஷ்டப்பட்டு நடித்தார். ஒரு டேக்கில் திருப்தியடையாமல் திரும்ப திரும்ப நடித்தார். டாக்டர்களிடம் ஆலோசனை பெற்று வெளிநாட்டில் இருந்து சிலிக்கான் பொருட்களை வரவழைத்து இரட்டையர்களாக ஒட்ட வைத்தோம்.

சிலிக்கான் செலவு ரூ. 25 லட்சம். ஒரு கட்டத்தில் அது கிழிந்தது. பிறகு சரி செய்தோம். இரு கேரக்டர்களும் வெவ்வேறு குணாதிசயங்களில் காதல், காமெடி, ஆக்ஷன், திரில்லர் இருக்கும். ஒட்டி இருந்து இருவரும் சண்டையிடும் காட்சியொன்று 25 நாட்கள் படமாக்கப்பட்டது.

சென்னை, ஐதராபாத் ஸ்டூடியோக்களில் நிறைய அரங்குகள் அமைத்து காட்சிகள் எடுத்தோம். சமூக பிரச்சினையொன்றும் படத்தில் உள்ளது. காஜல் அகர்வால் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

சச்சின் கடேகர், தாரா, ரவிபிரகாஷ் போன்றோரும் உள்ளனர். ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளன. சவுந்தரராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஜி.எஸ். பட நிறுவனம் பெரும் செலவில் படத்தை எடுத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நடிகர் திலகத்துக்கு இன்று பிறந்த நாள்: சூறாவளியாய் கலக்கிய சிவாஜிகணேசன்




நடிகர் திலகத்துக்கு இன்று பிறந்த நாள்: சூறாவளியாய் கலக்கிய சிவாஜிகணேசன் நடிகர் திலகத்துக்கு இன்று பிறந்த நாள்: சூறாவளியாய் கலக்கிய சிவாஜிகணேசன்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு இன்று 85-வது பிறந்தநாள். 1952-ல் 'பராசக்தி'யில் குணசேகரனாக அறிமுகமாகி 1999 வரை திரையுலகில் முடிசூடா மன்னனாக திகழ்ந்தார்.

பாடல்களே படங்களாகவும் பாட தெரிந்தவர்களே பெரும் நடிகர்களாகவும் இருந்த நியதிகளை உடைத்தெரிந்து வசன உச்சரிப்பாலும் நடிப்பு பரிமாணங்களாலும் ரசிகர்களை தன் வசம் கவர்ந்தார்.

'மனோகரா', 'திருவிளையாடல்', 'தங்க பதக்கம்' படங்களில் அவர் பேசிய வசனங்கள் நெருப்பை கக்கின. திரையுலகில் 50 ஆண்டுகள் சூறவாளியாய் கலக்கினார்.

வீரபாண்டிய கட்டபொம்மனையும், கப்பலோட்டிய தமிழனையும், வாஞ்சிநாதனையும், பகத்சிங்கையும் கண்முன் நிறுத்தினார். ராஜராஜசோழன் போன்ற சரித்திர புருஷர்களையும் கடவுள்களையும் சிவனடியார்களையும் மனக்கண்ணில் கொண்டு வந்தார்.

பத்மஸ்ரீ, பத்மபூஷன், டாக்டர், செவாலியே என எண்ணற்ற பட்டங்களை அவர் பெற்று இருந்தாலும் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் எவரும் பெறமுடியாத நடிகர் திலகம் பட்டத்தை அவர் பெற்று இருந்தார்.

இளம் தலைமுறை நடிகர்கள் வசங்களை பேசியோ இன்றும் நடிப்பு பயிற்சி பெறுகின்றனர். அண்ணன் தங்கை பாசத்தை சித்தரித்த 'பாசமலர்', ஒன்பது வேடங்களில் வித்தியாசம் காட்டி ஆச்சரியப்படுத்திய 'நவராத்திரி', கர்ணனை காட்சிபடுத்திய 'கர்ணன்' படம் 'தில்லானா மோகனாம்பாள்', 'வியட்நாம் வீடு', 'வசந்தமாளிகை' என எண்ணற்ற காவிய படங்களை தமிழ் பட உலகுக்கும் தமிழர்களுக்கும் தந்தார்.

நடிப்புலக மேதை சிவாஜி இன்று நம்மிடையே இல்லை என்றாலும் அவர் விட்டுச்சென்ற கதாபாத்திரங்கள் மூலம் என்றென்றும் தமிழர்கள் நெஞ்சில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.

ரசிகர்களுக்கு பிடித்த கதைகளில் நடிப்பேன்: காஜல் அகர்வால்



ரசிகர்களுக்கு பிடித்த கதைகளில் நடிப்பேன்: காஜல் அகர்வால் ரசிகர்களுக்கு பிடித்த கதைகளில் நடிப்பேன்: காஜல் அகர்வால்

காஜல்அகர்வால் இந்தி, தெலுங்கு படங்களில் பிசியாக நடிக்கிறார். இந்நிலையில் அவர் அளித்த பேட்டி வருமாறு:-

நடிகர், நடிகைகள் சினிமாவில் கஷ்டப்பட்டு நடிக்கிறார்கள். எதுவும் சும்மா வந்து விடாது. நான் கஷ்டப்படுவதால் அதற்குரிய பலனை எதிர்பார்க்கிறேன். எவ்வளவு கஷ்டப்படுகிறேனோ அதற்கு இரட்டிப்பு பலன் வேண்டும். சம்பளத்துக்கும் அது பொருந்தும். ரசிகர்களின் பாராட்டையும் இரு மடங்கு எதிர்பார்க்கிறேன்.

தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்து வருகிறேன். இந்தியிலும் ஒரு படம் கைவசம் உள்ளது. சில படங்கள் வேகமாக முடிந்து விடும். எப்போது படப்பிடிப்பு துவங்கியது. எவ்வளவு நாள் முடிந்தது என்பதே தெரியாது. ஆனால் சில படங்களில் உடம்பை வருத்தி நடிக்க வேண்டி இருக்கும். அவை நன்றாக ஓடும்போது பட்ட கஷ்டமெல்லாம் பறந்து போகும்.

எந்த மாதிரி படங்களில் நடிக்க விரும்புகிறீர்கள் என்று கேட்கிறார்கள். ரசிகர்கள் எப்படிப்பட்ட கதைகளை விரும்புகிறார்களோ அந்த படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். இந்த காலத்து இளைஞர் மனதில் இடம் பிடிக்கும் கேரக்டர்களில் நடிக்க விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Popular Posts