85-வது ஆஸ்கர் விருது விழா இந்திய நேரப்படி இன்று காலை 7 மணிக்கு அமெரிக்காவில் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடந்த இந்த விழாவில்,பங்கேற்பதற்காகவும் விருதுகளைப் பெறுவதற்காகவும் ஹாலிவுட் மற்றும் உலகின் பல பகுதிகளைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் அரங்கில் குவிந்தனர்.
ஆராவாரமான இந்த விழாவில், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் Lincoln திரைப்படம் 12 பிரிவுகளில் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அதில் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த புரொடக்ஷன் டிசைனர் ஆகிய இரண்டு பிரிவுகளில் மட்டுமே விருதுகளைப் பெற்றது.
இந்தியாவைக் கதைக்களமாகக் கொண்ட லைஃப் ஆப் பை திரைப்படம் 11 பிரிவுகளிலும், Les Miserables , Silver Linings Playbook ஆகிய திரைப்படங்கள் தலா 8 பிரிவுகளிலும் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
இதில் லைஃப் ஆப் பை திரைப்படத்திற்கு சிறந்த டைரக்டர், சிறந்த ஒளிப்பதிவு,சிறந்த விஷூவல் எபெக்ட்ஸ், சிறந்த பின்னணி இசை ஆகிய 4 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளது. இந்த ‘லைஃப் ஆப் பை’ திரைப்படம் புதுச்சேரியை கதைக் களமாக கொண்டு எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
2013 - ஆஸ்கார் விருதுகள் பற்றிய முழுமையான விபரங்கள் :
Best Picture: Argo
Best Actor: Daniel Day Lewis - Lincoln
Best Actress: Jennifer Lawrence - Silver Linings Playbook
Best Director: Ang Lee - Life of Pi
Best Actress in a Supporting Role: Anne Hathaway - Les Miserables
Best Actor in a Supporting Role: Christoph Waltz, Django Unchained
Best Foreign Language Film: Amour
Best Short Film (animated): Paperman
Best Feature Film (animated): Brave
Best Original Screenplay: Quentin Tarantino - Django Unchained
Best Adapted Screenplay: Chris Terrio - Argo
Best Cinematography: Claudio Miranda, Life of Pi
Best Visual Effects: Bill Westenhofer, Guillaume Rocheron, Erik-Jan De Boer and Donald R Elliott - Life of Pi
Best Original Score: Mychael Danna - Life of Pi
Best Original Song: Adele Adkins and Paul Epworth - Skyfall
Best Costume Design: Jacqueline Durran- Anna Karenina
Best Makeup and Hairstyling: Lisa Westcott and Julie Dartnell- Les Miserables
Best Documentary (Feature): Malik Bendjelloul and Simon Chinn - Searching for Sugar Man
Best Live Action Short Film - Curfew
Best Documentary (Short Film): Sean Fine and Andrea Nix Fine - Inocente
Best Sound Mixing: Andy Nelson, Mark Paterson and Simon Hayes - Les Miserables
Best Sound Editing: Zero Dark Thirty and Skyfall
Best Production Design: Rick Carter and Jim Erickson - Lincoln