அஜீத் நடித்து இருக்கும் படம் 'பில்லா 2′. சக்ரி டொலெட்டி இயக்க, யுவன்
சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். பார்வதி ஒமணக்குட்டன் நாயகியாக
நடித்து இருக்கிறார்.
'பில்லா 2' படத்தில் மும்முரமாக நடித்து வந்ததால் அஜீத் தனது
குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க முடியவில்லை. பில்லா 2 படத்தில்
அஜீத்தின் பணிகள் முடிந்த பின் குடும்பத்தினருடன் சிங்கப்பூர்சென்றார்.
சிங்கப்பூரில் இருந்து திரும்பி இருக்கும் அஜீத், தற்போது விஷ்ணுவர்தன்
படத்தில் நடிக்க இருக்கிறார்.
அஜீத் நடிக்க இருக்கும் படத்தின் கதை என்ன, யார் எல்லாம்நடிக்கிறார்கள்,
அஜீத் எந்த மாதிரி பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்பதை அறிய
விஷ்ணுவர்தனிடன் பேசியதில், அவர் "அஜீத் சாரிடம் சொன்ன ஒரு வரி கதைக்கு
திரைக்கதை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இன்னும்
அப்பணிகள் முடியவில்லை. அப்பணிகள் எல்லாம் முடிந்தால் தான் அந்தந்த
பாத்திரத்திற்கு யார் பொருந்துவார் தீர்மானிக்கப்படும் அதன் பிறகே அடுத்த
கட்ட பணிகள் துவங்கும்.
அதற்குள் பல்வேறு விதமாக செய்திகள் உலா வருகின்றன. எதிலும் உண்மையில்லை.
திரைக்கதைஅமைக்கும் பணி இறுதிகட்டத்தில் இருக்கிறது. அது முடிந்தால் தான்
மற்றவைகளில் கவனம் செலுத்துவோம்." என்றார்.
அஜீத் ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்றதற்கு " நீங்கள்
எனது படத்தில் வித்தியாசமான தலயை பார்க்க இருக்கிறீர்கள் என்பது மட்டும்
உறுதி " என்று சொல்லி தன் வழக்கமான் சிரிப்பால் ஃபினிஷிங் டச்
கொடுத்தார்.
Sunday, January 15, 2012
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
'The mistaken identity or the lost identity?' – This question could be a very important one for the look-alike artists in the film i...
-
Actress Sneha who has been referred as the smiling beauty of Tamil cinema will be soon marrying actor Prasanna. This marriage ...
-
சென்னை அம்பத்தூர் , சோழவரம் பகுதியைச் சேர்ந்தவர் கமலா. இவரின் கணவர் மகேந்திரன். அரசு பஸ் டிரைவர். கணவர் கொடுமைப்படுத்துவதா...
-
There were news that Rajni will be leaving for London to participate in the shooting of Kochadaiyaan but the date was not announced. Rajni h...
-
What is it about Bodhidharma that got Murugadoss so excited? Listening to him over the many interviews he has given lately to ...
-
Super star Rajnikanth had gone to worship Ezhumalaiyan in Thirumalai temple yesterday. He was accompanied by his wife Latha, daught...
-
When you're in a spot of bother and then come out of it, you should never forget those who helped you tide over the crisis. Director...
-
Former Deputy Chief Minister of Tamil Nadu M.K.Stalin's Son is Udhayanidhi Stalin. He produced many successful films. Now he is acting...
-
Kollywood directors have run into a wall after the unofficial strike in the industry started. The TFPC-FEFSI dead lock over wage revisi...
0 comments:
Post a Comment