Tuesday, September 18, 2012

காதல் வந்தால் சொல்லி அனுப்பு

No need for a Taj to show your love!
No Need A Taj Show Your Love

காதல் வந்தால் சொல்லி அனுப்பு... இது கவிஞர் ஒருவர் பாடிய பாட்டு. காதல் வரும் என்று காத்திருப்பவர்களுக்கு இந்தப் பாட்டு ஓ.கேதான். அதாவது காதல் வரும்போது சொல்லி அனுப்புத்தா, அதுவரை காத்திருக்கேன் என்று மகா பொறுமை காக்கும் பார்ட்டிகளுக்காக இந்தப் பாட்டு.

அப்புறம், இன்னொரு பாட்டு இருக்கிறது...

தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே.
காடு மலை நதிகள் எல்லாம் காதலின் சின்னமே...

இதில் முதல் வகையை பொறுமை சாலிகள் கிளப்பில் சேர்க்கலாம். இந்த 2வது பாடலுக்குரிய காதலர்களை பாசிட்டிவ் மைன்ட்செட் உள்ள குரூப்பில் கோர்த்து விடலாம்.

இந்த பாசிட்டிவ் பார்ட்டிகள்தான் வாழ்க்கையில் ஜெயிப்பவர்கள். எதார்த்தமான காதல்வாதிகள் இவர்கள். நிகரியவாதிகளாக இருப்பதை விட இந்த எதார்த்தவாதிகளதான் எப்போதும் வாழ்க்கையிலும் சரி, காதலிலும் சரி, எதிலுமே ஜெயிப்பவர்களாக உள்ளனர்.

சரி காதலில் ஜெயிக்க என்னதான் செய்யலாம்...ஒன்றுமே செய்யாதீர்கள், நீங்கள் நீங்களாகவே இருங்கள், பாதி ஜெயித்ததற்கு அது சமம். இயல்பு வாழ்க்கையில் எல்லாவற்றுக்குமே முக்கியம். எவன் ஒருவன் இயல்பாக இருக்கிறானோ, அவனே எல்லாவற்றிலும் வெல்கிறான் என்று ஒரு பழமொழி கூறுகிறது.

காதலில் பொய்களுக்கு நிறைய இடம் உண்டு. அதேசமயம், 99 சதவீதம் உண்மை, ஒரு சதவீதம் பொய் என்று வைத்துக் கொண்டு அணுகிப் பாருங்கள், நீங்கள் மின்னல் வேகத்தில் கிளவுட் 9க்குப் போய் விடலாம். நிஜம்தான் சார், பொய் இல்லை.! அதேசமயம், அந்த ஒரு சதவீத பொய்யைக் கூட காரணத்தோடு கூறினால் சாலச் சிறந்தது.

காதலியிடம் நிறையப் பேர் பொய் சொல்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். உன் கன்னம் ஒரு பஞ்சு மெத்தை என்பார்கள், கண்ணை ஏதாவது ஒரு இல்லாத பூவுடன் ஒப்பிட்டுச் சொல்வார்கள் - அதாவது 16 வயதினிலே படத்தில் இல்லாத செந்தூரப் பூவை வைத்து கங்கை அமரன் பாட்டு எழுதியது போல - கூந்தலை அப்படி இப்படி என்று வர்ணிப்பார்கள்.. இப்படி பிட்டுப் பிட்டாக போட்டுக் கொண்டிருப்பார்கள் - சச்சின் படத்தில் வடிவேலுவும், விஜய்யும் போடுவதைப் போல.

ஆனால் அப்படி இருக்காதீர்கள். உங்கள் காதலியின் இயல்பான போக்கிலேயே நீங்களும் டிராவல் பண்ணுங்கள். அவரது உண்மையான அழகை அப்படியே சொல்லுங்கள், அவரது குணத்தை இயல்பாக வர்ணியுங்கள், அவரது தவறுகளை சரியாக சுட்டிக் காட்டுங்கள், அவரது பலத்தை அவருக்கு சொல்லிக் காட்டுங்கள், அவரது பலவீனத்தை அவருக்கே தெரியாமல் திருத்திக் காட்டுங்கள்.

அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம், எப்பப் பார்த்தாலும் வாயை ஈரமாக வைத்திருக்காதீர்கள் - ஜொள்ளு உடம்புக்கு ஆகாது, பெண்களுக்கும் பிடிக்காது. அளவாகப் பேசுவதே காதலுக்கு நல்லது. அளந்து விடாமல் இயல்பாகப் பேசும் ஆண்களைத்தான் பெண்களுக்கு ரொம்பப் பிடிக்கும்.

காதலி மீது நீங்கள் காட்டும் அக்கறை அவரது மனதில் உங்களை உட்கார வைக்கும். அவர் மீது நீங்கள் காட்டும் உண்மையான பரிவை அவர் நிச்சயம் விரும்புவார். நம்மை அவர் காதலிக்கிறாரே, பிறகென்ன, எப்படி வேண்டுமானாலும் பேசி அவரை ஏமாற்றலாம் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள். அது பெரிய தவறு. உங்களைப் பற்றி உங்களது காதலிக்கு நிச்சயம் எல்லாமே புரிந்திருக்கும், குறிப்பாக மைன்ட் ரீடிங்கில் நீங்கள் மாட்டிக் கொள்வீர்கள், அப்புறம் உங்களது காதல் டண்டணக்கத்தான்.!

நிறையக் காதலர்கள் போனிலும், மெயிலிலும் மெசேஜிலும் பேசிப் பேசியே காதலை வளர்ப்பார்கள். அது தேவையில்லாதது, அதில் உண்மை இருக்காது, இயல்பு இருக்காது. மனசுக்குள் பேசிப் பாருங்கள், நிச்சயம் நீங்கள் இதயம் வெல்வீர்கள்.

அதெப்படி நான் மனசுக்குள் பேசினால் அவுகளுக்குத் தெரியும் என்று சின்னப்புள்ளைத்தனமாக கேட்கப் படாது... நீங்கள் பேசிப் பாருங்கள், அவருக்குக் கேட்கும். அவர் பேசும்போது உங்களுக்குக் கேட்கும். அப்பதாங்க நீங்க உண்மையாவே காதலிக்கிறீர்கள் என்று அர்த்தம்...

சரி நிறையப் பேசியாச்சு, இனியும் பேசினா அடிக்க வந்தாலும் வருவீங்க. இதை வச்சு போய் காதலை டெவலப் பண்ணுங்க.. ஆல் தி பெஸ்ட்... அப்புறம் சாரே மறக்காதீங்க, இயல்பா இருங்க, இதயத்தை வெல்லுங்க...!

0 comments:

Post a Comment

Popular Posts