தாண்டவம் பட பிரச்சினை: அமீரை அவதூறாக பேசுவதா?: இயக்குனர் விஜய் கண்டனம் தாண்டவம் பட பிரச்சினை: அமீரை அவதூறாக பேசுவதா?: இயக்குனர் விஜய் கண்டனம்
தாண்டவம் பட இயக்குனர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தாண்டவம் திரைப்பட பிரச்சினை தொடர்பாக உதவி இயக்குனர் பொன்னுசாமி தொடுத்த வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டு இதுநாள் வரையிலான பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இவ்வழக்கை கையில் எடுத்துக்கொண்ட நாள் முதல் நான் முழுமையான ஒத்துழைப்பு தரவிழைந் ததற்கு காரணம் இயக்குனர் அமீர் மற்றும் இயக்குனர் ஜன நாதன் மேல் நான் வைத்த அளவுகடந்த நம்பிக்கை. சங்கத்தின் மீது எனக்கிருக்கும் அளவற்ற மரியாதை இவை அனைத்தையும் மீறி உதவி இயக்குனர் பொன்னுசாமிக்கு அவர் கதை வேறு, என் கதை வேறு என்று தெளிவுபடுத்த விரும்பியதால் நான் திரைக்கதையை வாசிக்க கொடுத்தேன். தொடர்ந்து என் படத்தையும் பார்க்க அனுமதித்தேன்.
இன்று இவ்வழக்à ��ு வெற்றி பெற்றதால் இதுவரை போராடிய நியாயத்தின் பக்கம் கிடைத்த வெற்றிக்காக மகிழ்ச்சி அடையலாம். ஆனால் உள்ளூர எனக்கு வேதனையும், வருத்தமும் எனக்குள் இருக்கிறது.
காரணம் இப்பிரச்சினை தொடர்பாக இயக்குனர் அமீர் தனது இயக்குனர் சங்க பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். உண்மையில் இப்பிரச்சினையை நேர்மையாகவும், உண்மையாகவும் விசார�® �த்து இரு குழுவினராக படத்தையும் பார்க்க வைத்து அதில் கருத்து வேற்றுமை ஏற்பட்டதால் எண்ணையும் பொன்னுசாமியையும் நீதிமன்றத்துக்கு சென்று சரியான தீர்வு காணும்படி அறிவுறுத்தினார்.
அவர் ஒருபோதும் ஒரு சாராராக நடந்து கொள்ளாமல் உண்மையே வெல்ல வேண்டும் என்று தனது அனைத்து வேலைகளின் நடுவிலும் ஒருமாத காலமாக எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் போராடினார். அப்படி �® �டுநிலை வகித்த அமீர் மீது இன்று சிலபேர் அவதூறு பேசுவதாக அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.
இயக்குனர் சங்கம் இன்று தமிழ் திரைஉலகில் ஒரு முக்கியமான சங்கமாக உருவெடுத்திருக்கும் காரணம் இயக்குனர் அமீர் மற்றும் இன்று பதவி வகிக்கும் சக நிர்வாகிகளுமே என்பது மறுக்க முடியாத உண்மை.
இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.
0 comments:
Post a Comment