Tuesday, February 19, 2013
Jillunnu Oru Santhippu Movie Review
இனி டைரக்ஷன் மட்டும் தான் : தயாரிப்பு நிறுவனத்திலிருந்து விலகினார் டைரக்டர் பிரபு சாலமன் !
மைனா என்ற படத்தை தனது நண்பர் ஜான் மேக்ஸ் உடன் ‘ஷாலோம் ஸ்டுடியோஸ்’ நிறுவனத்தின் மூலம் இணைந்து தயாரித்தார் பிரபு சாலமன். அந்தப் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அதே நிறுவனத்தில் அடுத்து சமுத்திரக்கனி நடித்த ‘சாட்டை’ என்ற படத்தையும் தயாரித்தார்.
இரண்டு படங்களும், அவருக்கு நல்ல பெயர்களையும், பணத்தையும் சம்பாதித்துக் கொடுத்த வேலையில் இப்போது திடீரென்று தயாரிப்பு நிறுவனத்திலிருந்து விலகிக் கொள்வதாக கூறியிருக்கிறார் அவர்.
இதுகுறித்து பிரபு சாலமன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது : “ஒரே நேரத்தில் தயாரித்து இயக்குவது கஷ்டமாக உள்ளது. அதனால்தான் ஷாலோம் ஸ்டுடியோவிலிருந்து விலகிவிட்டேன். இனி ஜான் மேக்ஸ் மட்டுமே அந்த நிறுவனத்தில் இருப்பார். எனது அடுத்த படம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடுவேன்”
இவ்வாறு கூறியிருக்கிறார்.
Monday, February 18, 2013
Friday, February 15, 2013
குறும்பட போட்டி
இதுகுறித்து நார்வே தமிழ் திரைப்பட விழா குழு சார்பில் இன்று வெளியாகியுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :
பெருமைக்குரிய நார்வே தமிழ் திரைப்பட விழாவின் 4-ஆம் ஆண்டு குறும்பட போட்டிக்காக படங்கள், ஆவணப் படங்கள் மற்றும் இசை வீடியோக்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த நிகழ்வானது எதிர்வரும் மார்ச் மாதம் 10 தேதி ஆஸ்லோவில் உள்ள Nedre Fossum Gard -Stovner என்னும் இடத்தில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணிவரை நடக்கவிருக்கிறது.
உலகம் முழுவதும் பரந்து வாழும் கலைஞர்களிடம் இருந்து படைப்புகளை எதிர்பார்க்கிறோம்.
எமக்கு கிடைக்கபெறுகின்ற உங்கள் படைப்புகளில் இருந்து 20 குறும்படங்கள், 10 ஆவணப்படங்கள், 10 இசை காணொளிகள் (Music video) தெரிவு செய்யப்பட்டு திரையிடப்படும்.
இவற்றிலிருந்து இரண்டு குறும்படங்களுக்கு, இரண்டு ஆவணப்படங்களுக்கு, ஒரு காணொளி காட்சிக்கும் தமிழர் விருது வழங்கப்படும்.
இந்த ஆண்டின் சிறப்பம்சமாக தமிழ் சினிமா துறை தவிர்த்த கலைஞர்களிடம் இருந்து வருகின்ற சிறந்த பாடல் காட்சிகளை தேர்ந்தெடுத்து தமிழர் விருது வழங்கத் திட்டமிட்டுள்ளோம். நார்வே திரைப்பட விழாக்குழு தேர்ந்து எடுக்கும் சிறந்த 10 காணொளிகளை, வசீகரன் இசைக்கனவுகள் நிறுவனம் டிவிடி வடிவில் இந்த ஆண்டு வெளியிடவிருக்கிறது.
குறும்பட போட்டிக்கான விதிமுறைகள்:
+ தமிழ் மொழியையும், தமிழர்களுடைய கலை, கலாச்சாரத்தை அடையாள படுத்துவதாக இருக்கவேண்டும்.
+ திரைப்படத்தில் சொல்லப்படுகின்ற கருத்து தமிழ் சமூகத்தை நல்வழிப் படுத்துவதாக அமையவேண்டும்.
+ உலகத் தமிழர்களின் இன்ப, துன்பங்களைப் பேசுவதாகவும், தமிழர்களின் நியாயமான விடையங்களுக்கு பாதகமற்ற முறையில் இருக்கவேண்டும்.
+ இணையங்களில் ஏற்கெனவே வெளியான குறும்படங்களாக இருந்தால் எமது கவனத்திற்கு கொண்டு வரவேண்டும்.
+ நார்வே தமிழ் திரைப்பட விழாவிற்கு பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட குறும்படங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
+ ஏற்கனவே வெளியீடு செய்யப்படாத படங்களாக இருந்தால் வரவேற்கப்படும்.
+ குறும்படங்கள் 25 நிமிடங்களுக்கும், ஆவணப்படங்கள் 60 நிமிடங்களுக்கும், காணொளி 5 நிமிடங்களுக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும்.
+ குறும்படங்கள் 01.01.2012 இல் இருந்து 25.02.2013 தேதிக்கு முன் தயாரிக்கப்படாததாக இருக்கவேண்டும்.
+ அனைத்து குறும்படங்கள், ஆவணப்படங்களுக்கும் ஆங்கிலத்தில் சப் டைட்டில்கள் அவசியம்.
+ தேர்வு செய்யப்பட்ட / செய்யப்படாத படைப்புகள் எதுவும் எம்மால் திருப்பி அனுப்பி வைக்கப்படமாட்டாது.
+ படைப்புகளை அனுப்ப கடைசி தேதி 25.02,2013.
+ நடுவர் குழு பார்வைக்கான டிவிடி அல்லது புளூ ரே இரண்டு பிரதிகள் அனுப்பி வைக்கவேண்டும்.
+ இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நார்வே தமிழ் திரைப்பட விழா வரும் ஏப்ரல் 24-ம் தேதி தொடங்கி, 28-ம் தேதி நிறைவடைகிறது.
மேலும் விபரங்களுக்கு http://www.ntff.no என்ற இணைய முவரிக்கு செல்லலாம்.
ஆதிபகவன் சென்ஸார்
திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகனின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஆதிபகவான் படத்தை அமீர் டைரகக் செய்துள்ளார்.
இந்தப் படத்தில் ஜெயம்ரவி ஹீரோவாகவும், நீத்து சந்திரா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். சுமார் இரண்டு ஆண்டுகளாக நீண்டகால தயாரிப்பில் இருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு ஒருவழியாக முடிந்து எடிட்டிங், டப்பிங் பணிகள் நடந்து வந்தன.
இப்போது படத்துக்கு சென்சாரில் ‘ஏ சர்டிஃபிகேட் கிடைத்திருக்கிறது.
படத்தில் கவர்ச்சிப்புயல் நீதுசந்த்ரா இருந்தும் முகம் சுழிக்க வைக்கும் கவர்ச்சி சீன்கள் வைக்காமல் போனாலும், ஸ்டண்ட் சீன்கள் அதிக ரத்தமாக இருப்பதால் சென்சார் போர்டு இந்தப்படத்துக்கு ‘A’ சர்டிஃபிகேட் கொடுத்திருப்பதாகத் தெரிகிறது.
கடந்த சில வாரங்களாக விரைவில்... என்று தினமும் பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கப்பட்டு வந்த இந்தப்படம் வருகிற 22-ஆம் தேதி ரிலீஸாகிறது. ஆனால் ‘A’ சர்டிபிகேட் வாங்கிய படத்தை சேனல்களில் ஒளிப்பரப்ப தடை இருப்பதால் படத்தின் ரிலீஸுக்குப் பிறகு மீண்டும் ஒரு சென்சார் செய்து சாட்டிலைட் ரைட்ஸை பிரபல சேனலான சன் டிவிக்கு விற்பனை செய்துவிடும் திட்டத்தில் இருக்கிறார் டைரக்டர் அமீர்.
இந்தப்படத்தை சென்ஸார் செய்வதற்கு முன்பு சன் டிவிக்கு பெரிய தொகைக்கு விற்பனை செய்ய டைரக்டர் அமீரும், தயாரிப்பாளர் ஜெ.அன்பழகனும் பேரம் பேசு வந்தது குறிப்பிடத்தக்கது.
Friday, February 8, 2013
அனுஷ்காவின் ருத்ர மாதேவி
அனுஷ்காவின் ருத்ர மாதேவி க்காக மீண்டும் சிம்பொனி இசைக்கும் இளையராஜா!
தமிழ்,தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் டஜன் கணக்கில் படங்களை வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து அனுஷ்காவின் புதிய படத்தில் இசைஞானி இளையராஜ மீண்டும் சிம்பொனி இசைக்குழுவுடன் இணைந்து இசையமைக்க உள்ளார்.
1998 ஆம் ஆண்டில் ரிலீஸான ராமாயாணம், ஒக்கடு, மனோகரம் ஆஙிய தெலுங்கு வெற்றிப் படங்களையும் தந்த பிரபல டைரக்டர் குணசேகரன் ஏராளமான பொருட்செலவில் தெலுங்கில் டைரக்ட் செய்து தயாரித்து வரும் சரித்திரப்படம் தான் ‘ருத்ரமா தேவி’.
இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்காக மீண்டும் லண்டனைச் சேர்ந்த சிம்பொனி இசைக்குழுவுடன் இணைய உள்ளார் ‘இசைஞானி’ இளையராஜா.
மேலும் ஏற்கனவே இந்தப்படத்தில் இடம்பெறும் ஆறு சூப்பர்ஹிட் பாடல்களையும் கம்போஸ் செய்து விட்ட இசைஞானி விரைவில் லண்டனில் உள்ள சிம்போனி ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் எல்லா பாடல்களும் ரெக்கார்ட் செய்யப்பட இருப்பதாக படத்தின் டைரக்டரும், தயாரிப்பாளருமான குணசேகரன் தகவல் வெளியிட்டுள்ளார்.
பொதுவாக எந்த படத்துக்கும் அதிகபட்சம் 20 நாட்களுக்கு மேல் கால்ஷீட் கொடுக்காத அனுஷ்கா இந்தப்படத்துக்காக மட்டுமே சுமார் 90 நாட்களுக்கும் மேல் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Thursday, February 7, 2013
பவர்ஸ்டாருக்கு போட்டியா? திருமதி தமிழ் 400 தியேட்டர்களில்
அதுமட்டுமில்லாமல் படம் சம்பந்தப்பட்ட புகைப்படங்களையும், அதன் டீசரையும் பார்த்தவர்கள் ராஜகுமாரனின் ஆக்ஷன், ரியாக்ஷன்களைப் பார்த்து மெய் மறந்து சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள் காரணம் அந்தளவுக்கு படத்தில் அவர் இஷ்டத்துக்கு செய்திருக்கும் மூவ்மெண்ட்டுகள் எல்லாமே பவர் ஸ்டாரையே தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு செம காமெடியாக உள்ளதாம். குறிப்பாக படத்தின் டீசரில் அவருடைய டயலாக் பேசும் மாடுலேஷன்களும்,ஆக்ஷன் சீன்களும் இவர் தான் பவர்ஸ்டாருக்கு சரியான போட்டி என்று சொல்லும் அளவுக்கு களைகட்டியிருக்கிறது.
இதனால் இந்த ‘திருமதி தமிழ்’ படத்துக்கு இப்போதே ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ பட ரேஞ்சில் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. அது உண்மைதான் என்பது போல இந்தப் படத்தை ராஜகுமாரன் சுமார் 400 க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய ப்ளான் பண்ணி வருகிறாராம். பவர்ஸ்டார் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் கூட 200 தியேட்டர்களில் தான் ரிலீஸாகியிருந்தது, ஆனால் இந்தப்படத்தை அதைவிட அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்வேன் என்று ராஜகுமாரன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவர் இந்தப்படம் எனக்கு நிச்சயமாக வெற்றிப்படமாக அமையும் என்றும் அசராமல் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் ராஜகுமாரன்.
Popular Posts
-
Nandha played a very prominent role in the spine-chilling horror movie Eeram which gave him a big break in 2009. He followed up with yet...
-
Karthi's current project on hands is a film directed by Suraaj. The director had made films like Padaikkathavan in the past. Th...
-
'Thuppakki' is the film featuring Vijay, Kajal Agarwal, Jayaram and Sathyan in the lead roles. It is written and directed by A.R.Mur...
-
இரண்டாம் திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை- பிரபுதேவா என் வாழ்க்கையில் இனி இரண்டாவது திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை. என் குழந்தைக...
-
The shooting of the film Kochadaiyaan which has Rajni in the lead role is going on in top gear. The shooting of this film is going on in Pin...
-
Akshara Hassan, Kamal Haasan and Sarika's younger daughter is all butterflies now as she is in love now. The young lady is dati...
-
Sneha and Prasanna, who previously announced about their relationship, now confirmed that their marriage date will be declared...
-
Shruthi Haasan Hot in Gabbar Singh Stills,Shruthi Haasan latest still in gabber singh,Shruthi Haasan spicy photos ,Shruthi Haasan imagess ga...
-
Cast : Kunchacko Boban as Ram Jayasurya as Shankar Indrajith as Bhaskar Unni Raja Sandhya as Manju Ann Augustine as R...
-
Vishal and Anjali at a remote village in China Vishal and Anjali at a remote village in China Says the director, "The village whe...



