Thursday, February 7, 2013

பவர்ஸ்டாருக்கு போட்டியா? திருமதி தமிழ் 400 தியேட்டர்களில்

தமிழ்சினிமாவின் முன்னணி நடிகையாக வலம்வந்து கொண்டிருந்த தேவயானியை திருமணம் செய்து கொண்ட பிறகு குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகி விட்ட டைரக்டர் ராஜகுமாரன் மிக நீண்ட இடைவெளிக்குப்பிறகு ‘திருமதி தமிழ்’ என்ற பெயரில் ஒரு படத்தை டைரக்ட் செய்து வருகிறார்.
பவர்ஸ்டாருக்கெல்லாம் தியேட்டருக்கு கூட்டம் வரும்போது தான் நடித்தால் ரசிகர்கள் பார்க்க மாட்டார்களா.. என்ன, என்று நினைத்தாரோ என்னவோ? அவர் தான் இந்தப்படத்தில் ஹீரோவாக அவதாரமெடுத்திருக்கிறார். ஹீரோயினாக அவரது குடும்ப இஸ்த்ரி தேவயானி நடித்திருக்கும் இந்தப்படத்தின் ஆடியோ ரிலீஸ் பங்ஷனை சமீபத்தில் தான் சென்னையிலுள்ள உட்லண்ட் தியேட்டரில் மிகப்பிரம்மாண்டமாக நடத்தி அசத்தினார் ராஜகுமாரன்.
அதுமட்டுமில்லாமல் படம் சம்பந்தப்பட்ட புகைப்படங்களையும், அதன் டீசரையும் பார்த்தவர்கள் ராஜகுமாரனின் ஆக்‌ஷன், ரியாக்‌ஷன்களைப் பார்த்து மெய் மறந்து சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள் காரணம் அந்தளவுக்கு படத்தில் அவர் இஷ்டத்துக்கு செய்திருக்கும் மூவ்மெண்ட்டுகள் எல்லாமே பவர் ஸ்டாரையே தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு செம காமெடியாக உள்ளதாம். குறிப்பாக படத்தின் டீசரில் அவருடைய டயலாக் பேசும் மாடுலேஷன்களும்,ஆக்‌ஷன் சீன்களும் இவர் தான் பவர்ஸ்டாருக்கு சரியான போட்டி என்று சொல்லும் அளவுக்கு களைகட்டியிருக்கிறது.
இதனால் இந்த ‘திருமதி தமிழ்’ படத்துக்கு இப்போதே ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ பட ரேஞ்சில் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. அது உண்மைதான் என்பது போல இந்தப் படத்தை ராஜகுமாரன் சுமார் 400 க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய ப்ளான் பண்ணி வருகிறாராம். பவர்ஸ்டார் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் கூட 200 தியேட்டர்களில் தான் ரிலீஸாகியிருந்தது, ஆனால் இந்தப்படத்தை அதைவிட அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்வேன் என்று ராஜகுமாரன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவர் இந்தப்படம் எனக்கு நிச்சயமாக வெற்றிப்படமாக அமையும் என்றும் அசராமல் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் ராஜகுமாரன்.

Tuesday, November 6, 2012

சோகத்தில் இருந்து மீண்டு வந்தார் த்‌ரிஷா!

சோகத்தில் இருந்து மீண்டு வந்தார் த்‌ரிஷா!
Trisha-in-JFW-Magazine-New-Photoshoot-3
தந்தையின் திடீர் மரணம் காரணமாக ஹைதராபாத் சென்ற த்‌ரிஷா அந்த சோகத்திலிருந்து இன்னும் மீளவில்லை. என்றாலும் கடமை அழைக்கிறது.
சமர், என்றென்றும் புன்னகை, பூலோகம் என தமிழில் மூன்று படங்களில் நடித்து வருகிறார். இதில் சமர் சூப்பர் சீனியர். விஷால் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு த்‌ரிஷாவுக்காக காத்திருக்கிறது. அவர் வந்தால் மலேசியா சென்று பாடல் காட்சிகளை முடிக்கலாம் என்றிருக்கிறார் இயக்குனர் திரு.
அதேபோல் மற்ற இரு படங்களும்.
சீனியா‌ரிட்டி அதிகம் சமர் என்பதால் அதற்கே முக்கியத்துவம் தரயிருக்கிறார். அடுத்து பூலோகம் அதையடுத்து என்றென்றும் புன்னகை.

அனுஷ்காவை அதிரவைத்த ரசிகர்கள்!


anusha1
"ரெண்டு" படத்தில் மாதவன் ஜோடியாக அறிமுகமானவர் அனுஷ்கா. முதல் படம் சொல்லும் படி இல்லை என்ற போதிலும், அருந்ததி படம் அனுஷ்காவுக்கு பெரிய என்ட்ரியை கொடுத்தது. எந்த வேடமாக இருந்தாலும், அனுஷ்காவால் நடிக்க முடியும். திறமையான நடிகை என்று நிரூபித்த பின்னரும் இயக்குனர்கள் பலரும் ஹீரோவுடன் டூயட் பாடுவதற்கு மட்டும் அனுஷ்காவை உபயோகப்படுத்துகின்றனர். எனினும் அனுஷ்காவுக்கு என்று தனிப்பட்ட ரசிகர்கள் உண்டு.
சமீப காலமாக அனுஷ்காவின் ரசிகர்கள் பலரும் காஜல் அகர்வால், சமந்தா போன்றோர் பக்கம் பார்வையைத் திருப்பி இருக்கின்றனர். இதற்கு அனுஷ்கா நடித்து வெளியான தாண்டவம் படமும் ஒரு காரணம். தாண்டவம் படத்தில் அனுஷ்காவுக்கு சில காட்சிகளே ஒதுக்கப்பட்டிருந்தன. அனுஷ்காவிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு தாண்டவம் படம் திருப்தி அளிக்கவில்லை.
அனுஷ்காவின் ரசிகர்களில் சிலர், தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் அதிருப்தியை ட்விட்டர் மூலம் அனுஷ்காவுக்கே தெரியப்படுத்தி வருகின்றனர். இதனால் அதிர்ந்து போயிருக்கும் அனுஷ்கா, இரண்டாம் உலகம் படத்தில் இரண்டு வித்தியாசமான கெட்டப்களில் நடித்திருக்கிறேன். அது உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று பதிலளித்து வருகிறார்.

Monday, November 5, 2012

இழுத்துப் போர்த்திக்கிட்டு நடிக்க முடியாது : பிரியாமணி!

இழுத்துப் போர்த்திக்கிட்டு நடிக்க முடியாது : பிரியாமணி!
priyamani4
"சாருலதா" படம்மூலம் தமிழுக்கு ரீ-என்ட்ரி கொடுத்தார் பிரியாமணி. ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரிகளாக நடித்து அனைவரின் பாராட்டை பெற்றார். சாருலதா படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சுச்சு. ஒரு சில இடங்களில் சரியாக போகலைன்னாலும் எனக்கு நிறைய பாராட்டு கிடைச்சது. தேசிய விருது பெற்ற நீங்கள் ஏன் இப்படி கிளாமர் ரோலில் நடிக்கிறீர்கள் என்று கேட்கின்றனர். தேசிய விருது வாங்கிட்டா…? இழுத்துப் போர்த்திக்கிட்டு நடிக்கணும் என்று கட்டாயம் இருக்கா…? அந்தபடத்தில் அப்படி ஒரு கதாபாத்திரம். எனக்கு அப்படி ஒரு விருது கிடைத்ததற்காக டைரக்டர் அமீருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அது அந்த படத்தோடு முடிஞ்சு போச்சு. அதற்காக தொடர்ந்து பாவாடை தாவணியில் நடிக்க முடியுமா,? என கேள்வி எழுப்பியுள்ளார் பிரியாமணி.

Saturday, November 3, 2012

பிராமணர்கள் பற்றி அவதூறு: ஹன்சிகா படத்தை எதிர்த்து போராட்டம்!

பிராமணர்கள் பற்றி அவதூறு: ஹன்சிகா படத்தை எதிர்த்து போராட்டம்!
hansika_photoshoot_20120808_1206066462
ஹன்சிகா நடித்த 'தேனி கைனா ரெடி' என்ற தெலுங்கு படத்துக்கு எதிராக ஆந்திராவில் போராட்டம் வலுத்துள்ளது. இந்த படம் கடந்த வாரம் ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் ஹன்சிகா ஜோடியாக தெலுங்கு நடிகர் மோகன்பாபு மகன் விஷ்ணு மஞ்சு நடித்துள்ளார். மோகன்பாபுவே இப்படத்தை தயாரித்து உள்ளார். நாகேஸ்வர ரெட்டி இயக்கியுள்ளார். ரூ.5 கோடி செலவில் எடுத்துள்ளனர்.
இந்த படத்தில் பிராமண சமூகத்தினரை அவதூறு செய்வதுபோல் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதையடுத்து அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் படத்தை தடை செய்யக்கோரி போராட்டத்தில் குதித்துள்ளனர்.
ஐதராபாத்தில் உள்ள மோகன்பாபு வீட்டு முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது. மோகன்பாபுவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பினர். அப்போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும்,மோகன்பாபு பாதுகாவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாக்கப்பட்டனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள். பிராமின் சேவாசமிதி என்ற அமைப்பு மோகன்பாபுவையும், அவரது குடும்பத்தினரையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போலீசில் புகார் செய்துள்ளது. ஆந்திரா முழுவதும் இப்படத்தை திரையிட தடைவிதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மோகன்பாபு மற்றும் நடிகர் விஷ்ணுமஞ்சு ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவது குறித்து மோகன்பாபு ஆலோசனை நடத்தி வருகிறார்.
சினிமாவில் பிராமணர்களை இழிவுபடுத்தும் காட்சி: நடிகர் விஷ்ணு மஞ்சு மீது செருப்பு வீச்சு!
பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாவுவின் மகன் விஷ்ணுமஞ்சு நடித்த தேனிகைனா ரெடி என்ற படம் சமீபத்தில் ரிலீஸ் ஆனது. இதில் பிராமணர்களை இழிவுபடுத்தும் காட்சி இருப்பதாக குற்றம் சாட்டி பிராமணர்கள் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் பிராமணர் சமூக இளைஞர்கள் சுமார் 50 பேர் நேற்று முன்தினம் இரவு ஐதராபாத்தில் உள்ள மோகன்பாபு வீட்டுக்கு சென்று கோஷமிட்டபடி வீட்டை கல்வீசி தாக்கினார்கள். இதில் வீட்டு ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து கதவையும் உடைக்க முயன்றனர்.
உடனே காவலாளிகள் அவர்களை உருட்டு கட்டையால் தாக்கி விரட்டியடித்தனர். இதில் 2 பேர் காயம் அடைந்தனர். நேற்று பிராமணர்கள் சங்கத்தினர் ஐதராபாத்தில் உள்ள மனித உரிமை கமிஷன் அலுவலகத்துக்கு வந்தனர்.
நடிகர் விஷ்ணு மஞ்சு மீது அவர்கள் புகார் கொடுத்தனர். இதையடுத்து மனித உரிமை கமிஷனர் இது பற்றி விசாரணை நடத்தி வருகிற 28-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி போலீஸ் கமிஷனர் அனுராக்சர்மாவுக்கு நோட்டீசு அனுப்பினர்.
இதற்கிடையே தனது வீடு மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது புகார் கொடுக்க நடிகர் விஷ்ணு மஞ்சுவும் மனித உரிமை கமிஷன் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அங்கு கூடிநின்ற பிராமணர்கள் நடிகர் விஷ்ணுவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மேலும் விஷ்ணு மீது செருப்பு வீசினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உடனே போலீசார் தலையிட்டு விஷ்ணுவை பாதுகாப்பாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இதுபற்றி நடிகர் விஷ்ணு கூறும்போது எங்கள் வீட்டை தாக்கியவர்களை காவலாளி தடு¢தார்களே தவிர யாரையும் தாக்கவில்லை. என்றார்.
விஷ்ணுவுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மோகன்பாபு வீட்டில் நடக்கும் சுபகாரியங்களுக்கு செல்லமாட்டோம் என்று பிராமணர்கள் சங்கம் அறிவித்து உள்ளது.

Tuesday, October 23, 2012

துப்பாக்கி, கும்கி, போடா போடி உள்பட 7 படங்கள் தீபாவளிக்கு ரிலீஸ்

துப்பாக்கி, கும்கி, போடா போடி உள்பட 7 படங்கள் தீபாவளிக்கு ரிலீஸ்
தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 13-ந் தேதி எத்தனை படங்கள் ரிலீசாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களை தொற்றிக் கொண்டு உள்ளது. ரஜினியின் 'கோச்சடையான்', கமலின் 'விஸ்வரூபம்' படங்கள் தள்ளிப்போகின்றன. பெரிய பட்ஜெட் படமான சூர்யாவின் 'மாற்றான்' தீபாவளி போட்டியில் பங்கேற்காமல் முன்கூட்டியே ரிலீசாகி விட்டது.

தற்போதைய நிலவரப்படி 'துப்பாக்கி', 'கும்கி', 'போடா போடி', 'அம்மாவின் கைப்பேசி', 'கள்ளத்துப்பாக்கி', 'அஜந்தா', 'லொள்ளு தாதா பராக்பராக்' ஆகிய 7 படங்கள் தீபாவளிக்கு ரிலீசாவது உறுதியாகியுள்ளது.

'துப்பாக்கி'யில் விஜய், காஜல் அகர்வால் ஜோடியாக நடித்துள்ளனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். மும்பை குண்டு வெடிப்பை மையமாக வைத்து இப்படம் தயாராகியுள்ளது. 'போடா போடி'யில் சிம்பு நடித்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். காதல் கதையாக தயாராகியுள்ளது. 'கும்கி' படத்தில் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு கதாநாயகனாக அறிமுகமாகிறார். பிரபு சாலமன் இயக்கியுள்ளார். யானையை அடக்கும் இளைஞனை பற்றிய கதை. லிங்குசாமி இப்படத்தை தயாரித்துள்ளார்.

'அம்மாவின் கைபேசி' படம் தாய்க்கும், மகனுக்குமான பாச போராட்டத்தை விளக்கும் கதையம்சம் உள்ள படமாக தயாராகியுள்ளது. தங்கர் பச்சான் இயக்கியுள்ளார். பாக்யராஜின் மகன் சாந்தனு நாயகனாக நடித்துள்ளார். ரவிதேவனின் 'கள்ளத்துப்பாக்கி' திரில்லர் படமாக தயாராகியுள்ளது. 'லொள்ளு தாதா பராக் பராக்' படத்தில் மன்சூர்அலிகான் நாயகனாக நடித்துள்ளார். கந்து வட்டியை மையமாக வைத்து காமெடி படமாக தயாராகியுள்ளது. 'அஜந்தா' படத்தை ராஜ்பா ரவிசங்கர் திருமால் இயக்கியுள்ளனர். காதல் கதையாக தயாராகியுள்ளது.

மாலைப் பொழுதின் மயக்கத்திலே நாயகி சுபா பட்டேலா மரணம்

மாலைப் பொழுதின் மயக்கத்திலே' பட நாயகி சுபா பட்டேலா மரணம்
'மாலைப் பொழுதின் மயக்கத்திலே' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் சுபா பட்டேலா. பெங்களூரைச் சேர்ந்த இவர் மிஸ் பெங்களூராகவும் தேர்வானவர். தன்னுடைய முதல் படத்திலேயே நடிப்பாலும், அழகாலும் தமிழ் சினிமா ரசிகர்களை கிறங்கடித்தவர்.

'மாலைப் பொழுதின் மயக்கத்திலே' படத்திற்கு பிறகு தமிழில் அவருக்கு படங்கள் அமையாததால் தெலுங்கு பக்கம் போய், அங்கு ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட இவர், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த ஒரு வாரத்திற்கு முன் கோமா நிலைக்கு சென்றார். இதையடுத்து நேற்று இரவு அவர் திடீரென மரணமடைந்தார்.

இவருடைய மரணம் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா வட்டாரங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Popular Posts