Tuesday, September 11, 2012

டுவிட்டரில் ரசிகர்கள் ஏமாறுவதை தடுத்த ஹன்சிகா..!


டுவிட்டரில் ரசிகர்கள் ஏமாறுவதை தடுத்த ஹன்சிகா..! டுவிட்டரில் ரசிகர்கள் ஏமாறுவதை தடுத்த ஹன்சிகா..!


நடிகர்-நடிகைகள் பெயரில் டுவிட்டர், பேஸ்புக்கில் மோசடிகள் நடக்கின்றன. திரிஷா, நயன்தாரா, அசின், ஸ்ரேயா பெயர்களில் மோசடிகள் நடந்துள்ளன. ஏராளமான ரசிக ர்கள் போலிகளை உண்மை என நம்பி தொடர்பு வைத்து ஏமாந்து இருக்கிறார்கள். 
இந்த மோசடியை தடுக்க ஹன்சிகா முயற்சி மேற்கொண்டார். ஹன்சிகாவின் டுவிட்டரில் 1 1/2 லட்சம் ரசிகர்கள் தொடர்பில் உள்ளனர். தன் பெயரில் போலியாக டுவிட்டரில் கணக்குள் உள்ளனவா? தனது பெயரில் மட்டும்தான் கணக்கு உள்ளனவா என்றெல்லாம் சரிபார்த்து ஆய்வு செய்தார்.

இறுதியில் தன் பெயரில் டுவிட்டரில் மோ சடி நடக்கவில்லை என்று கண்டறிந்தார். இதன் மூலம் ரசிகர்கள் ஏமாறுவதையும் தடுத்துள்ளார்.
/

சமந்தாவே சரணம்... ஜீவாவின் புகழ்மாலை!

சமந்தாவே சரணம்... ஜீவாவின் புகழ்மாலை! சமந்தாவே சரணம்... ஜீவாவின் புகழ்மாலை!

டப்பிங் ஆர்ட்டிஸ்டுகள் புண்ணியத்தில்தான் தமிழ் வாழ்ந்து கொண்டிருக்கிறதுகோடம்பாக்கத்தில். நடிகைகள் பேசுகிற வசனங்களை அப்படியே வெளியிட்டால், ஒட்டுமொத்த கலவரங்களுக்கும் அதுவே காரணமாகிவிடும்.

அந்தளவுக்கு மென்று துப்புவார்கள் தமிழை. அப்படிப்பட்ட நாயகிகள் சிலரோடு நடித்த அனுபவமோ, என்னவோ? சமந்தாவுக்கு பூ போட்டு வணங்காத குறையாக சிலிர்க்கிறார் ஜீவா.

ஒரு மொழியை தெரிஞ்சுகிட்டு அர்த்தம் புரிஞ்சு நடிக்கறது எவ்வளவு அழகுன்னு சமந்தாவை பார்க்கும்போதுதான் தெரிஞ்சுகிட்டேன். அவங்களுக்கு தமிழும் தெரியும். தெலுங்கும் நல்லா பேசு வாங்க. நீதானே என் பொன் வசந்தம் படத்தை இரண்டு மொழியிலும் எடுக்கும்போது ரெண்டையும் உணர்ந்து அவங்க பேசி நடிச்சதுதான் அழகு என்றார் ஜீவா.

முகத்தில் உணர்ச்சிகளை கொண்டு வரணும்னா அந்த மொழியை நல்லா தெரிஞ்சுக்கறதுதான் முக்கியம். அந்த வகையில் சமந்தாவுக்கு ஒரு சல்யூட் என்கிற ஜீவா, தன் முகமூடி யை கழற்றி எறிந்துவிட்டு இந்த படத்தோடு ட்ராவல் செய்ய ஆரம்பித்துவிட்டார்.

இனி மிஷ்கின் பக்கம் தலைவச்சு படுப்பாரு?
/

டப்பா டான்ஸ் ஆடுது... எமிக்கு நேர்ந்த இம்சை..

டப்பா டான்ஸ் ஆடுது... எமிக்கு நேர்ந்த இம்சை.. டப்பா டான்ஸ் ஆடுது... எமிக்கு நேர்ந்த இம்சை..


ஒரு படம் எடுக்கிற பணத்தில் ஒரு பாட்டு மட்டும் எடுப்பார் ஷங்கர். பென்சில் சீவபிளேடு போதும். கோடரி எதற்கு என்று கேட்கிற சக்தி அவரை வைத்து படம் எடுத்த எந்த தயார ிப்பாளருக்கும் இருந்ததில்லை. மிஸ்டர் பிரமாண்டம் என்கிற அந்தஸ்தை அவருக்கு தந்திருப்பது இந்த செலவுகள்தான். இவ்வளவு செலவு செய்தாலும் அதற்குரிய நேர்மையை அந்த பாடலுக்குள் வைப்பதுதான் ஷங்கரின் தொழில் நேர்த்தி!

தன் படத்தில் வரும் பாடல்களுக்காகவே நிறைய சிந்திக்கும் ஷங்கருக்கு அண்மை காலத்தில் வந்திருக்கும் சோதனை சொல்லில் அடங்காதது.

ஐ படத்தில் ஹீரோயி னாக நடித்துக் கொண்டிருக்கும் எமிக்கு டான்ஸ் அவ்வளவு ஈஸியாக வருவதில்லையாம். ஒரு ஸ்டெப் வைப்பதற்குள் டப்பா டான்ஸ் ஆடிவிடுகிறதாம் எமிக்கும், அதை சொல்லித்தரும் மாஸ்டருக்கும். இதனால் பேரதிர்ச்சிக்குள்ளாகியிருக்கும் ஷங்கர், முதல்ல பிராக்டீஸ் பண்ணிட்டு செட்டுக்கு வாம்மா என்று கூறிவிட்டாராம்.

நெட்டு போல்ட்டெல்லாம் கழண்டு போகிறளவுக்கு பிராக்டீஸ் கொடுத்துக் கொ ண்டிருக்கிறார்களாம் இப்போது! எமியை உமியாக்காமல் ஓயமாட்டாங்க போலிருக்கே?
/

வீட்டுக்கு வராத சந்தனம்!



வீட்டுக்கு வராத சந்தனம்! வீட்டுக்கு வராத சந்தனம்!


சந்தன நடிகர் தன் பக்கம் வீசுகிற அதிர்ஷ்ட காற்றை பயன்படுத்திக்கொண்டு, இரவு-பகலாக நடிக்கிறார்.

ஒரு நாளைக்கு பல லட்சங்கள் சம்பளமாக கிடைப்பதால், எந்த வெளி நிகழ்ச்சிகளுக்கும் அவர் செல்வதில் லை.

முன்பெல்லாம் இரவு எந்நேரம் ஆனாலும், சந்தனம் வீடு திரும்பி விடுவாராம்.


இப்போதெல்லாம் வீட்டுக்கு கூட போவதில்லையாம். உழைப்பு...கடுமையான உழைப்பு!
/

மாற்றானை முந்தும் சாருலதா..!




மாற்றானை முந்தும் சாருலதா..! மாற்றானை முந்தும் சாருலதா..!

ஒட்டிப் பிறந்த இரட்டையர்களின் கதை ஏற்கனவே வந்திருக்கிறது. ஆனால் அந்த இரட்டையர்கள் இரு வேறு நடிகர்களாக இருப்பார்கள்.

உலக சினிமாவில் முதல்முறையாக இரட்டையர்கள் இருவராகவும் ஒரே நடிகர் நà ��ித்திருப்பது இதுவே முதல்முறை என்று நெஞ்சு வலிக்க தன்னைத்தானே தட்டிக் கொண்டார் கே.வி.ஆனந்த். ஆனால் இது உண்மையா? உலக அளவுக்கெல்லாம் போக வேண்டாம். உள்ளூர் அளவிலேயே இதனை பிசுபிசுக்க வைத்துள்ளது சாருலதா.

இதில் ப்‌ரியாமணி ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதி‌ரிகளாக நடித்துள்ளார். தாய்லாந்து படமான அரோனின் அப்பட்ட காப்பி. ஹன்ஸ்ரா‌ஜ் சக்சேனா போலீஸ் கஸ்டடிக்குப் பிறகà � தனியாக வந்து விநியோகிக்கும் முதல் படம். தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று மூன்று மொழிகளில் வெளியாகிறது.

சக்சேனாவின் முதல் அறிவிப்புபடி சென்ற மாதமே படம் வெளியாகியிருக்க வேண்டும். சில நடைமுறை சிக்கல்கள். இந்த மாதம் படம் வெளிவருகிறது. அக்டோபர் 12 மாற்றான் வெளிவருவதற்குள் மூன்று மொழிகளிலும் சாருலதாவை வெளியிடுவதில் தீவிரமாக உள்ளனர். ‌ரிலீஸ் தேதி தெ‌ரியாத நிலையில் இ ன்னும் சில தினங்களில் என்று தியேட்டர் டீட்டெயிலுடன் விளம்பரம் செய்திருக்கிறார்கள்.

ஆக, மாற்றானைவிட முன்னதாக சாருலதா வெண்திரைக்கு வந்துவிடும் என்பது திண்ணம்.
/

இரண்டாம் திருமணம் பற்றி சிந்திக்கவில்லை: பிரபுதேவா


இரண்டாம் திருமணம் பற்றி சிந்திக்கவில்லை: பிரபுதேவா இரண்டாம் திருமணம் பற்றி சிந்திக்கவில்லை: பிரபுதேவா

நயன்தாராவும், பிரபுதேவாவும் இரு வருடங்களு க்கு முன் காதல் வயப்பட்டனர். திருமணம் செய்து கொள்ளவும் முடிவெடுத்தார்கள். இதற்காக மனைவி ரம்லத்தை பிரபுதேவா விவாகரத்து செய்தார். நயன்தாராவும், இந்து மதத்துக்கு மாறினார். சினிமாவுக்கும் முழுக்கு போட்டார்.

திருமண தேதி நெருங்கும்போது திடீரென இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் காதலை முறித்துக் கொண்டு பிரிந்தனர். நயன்தாரா மீண்டும் நடிக்க வந்துள்ளார். பிரபுதேவா இந்திப் படங்களை இயக்குவதில் பிசியாகி விட்டார்.

மீண்டும் இரண்டாம் திருமணம் செய்து கொள்வீர்களா? என்று பிரபுதேவாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

மீண்டும் திருமணம் செய்து கொள்வது பற்றி தற்போது நான் சிந்திக்கவில்லை. சினிமாவில் முழு நேரமும் பிசியாக வேலை செய்து கொண்டு இருக்கிறேன். இந்த நிலையில் திருமணம் பற்றி திட்டமிட எனக்கு ஏது நேரம் இருக்கிறது. என் சொந்த வாழ்க்கை பற்றி யோசிப்பதற்கு நேரம் இல்லை. சினிமாவà ��ல் நிறைய பணிகள் இருக்கிறது. என் முழு கவனத்தையும் அதில்தான் செலுத்துகிறேன்.

என் குழந்தைகள் விடுமுறையில் இருக்கும்போது அவர்களுடன் நேரத்தை செலவிடுகிறேன். சல்மான்கானை வைத்து மீண்டும் படம் எடுப்பது பற்றி இப்போது எதுவும் சொல்வதற்கு இல்லை. அவரை 15 வருட ங்களாக எனக்கு தெரியும். நாங்கள் ஒருவர் மீது ஒருவர் அன்பு வைத்துள்ளோம்.

இந்தியில் நிறைய பணம் முதலீடு செய்து படம் எடுக்கின்றனர். எனவே பட வேலைகளில் முழுமையாக ஈடுபடுகிறார்கள். படப்பிடிப்பை துவங்கும் போதே ரிலீஸ் தேதியையும் அறிவித்து விடுகின்றனர். இந்திப் படங்களில் பணியாற்றுவதால் மும்பையில் வாடகைக்கு வீடு பார்த்து குடியேறியுள்ளே�® �். இங்கு சொந்தமாக வீடு எதுவும் வாங்கவில்லை.

இவ்வாறு பிரபுதேவா கூறினார்.


/

பாடகராக மாறி கலக்கிய பவர் ஸ்டார்!


பாடகராக மாறி கலக்கிய பவர் ஸ்டார்! பாடகராக மாறி கலக்கிய பவர் ஸ்டார்!

ஒரு காலத்தில் நக்கல் நையாண்டிப் பொருளாகப் பார்க்கப்பட்ட பவர் ஸ்டார் சீனிவாசன், இன்று நிஜமாகவே பவர் கூடி வருகிறார்.

ஷங்கர் படம், பாலா படம், சந்தானத்துடன் ஒரு படம் என ஏகப்பட்ட வாய்ப்புகள், கூடவே சொந்தமாக ஏழெட்டு பட தயாரிப்புகள் என உடம்பெல்லாம் மச்சம் கொண்ட அதிர்ஷ்ட பார்ட்டியாகிவிட்டார்.

இப்போது பாடகராகவும் அவதாரமெடுத்துள்ளார் சீனிவாசன்.

அவரது சொந்தப் படமான இந்திரசேனாவுக்காக அவரே சொந்தக் குரலில் பாடியுள்ளாராம். இந்தப் பாடலை விரைவில் யு ட்யூபில் ரிலீஸ் செய்யும் திட்டத்திலிருக்கிறார் சீனிவாசன்.

இன்றைய சூழலில் பல முக்கிய படங்கள் யு ட்யூபை விளம்பர சாதனமாகப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டன. எனவே தானும் அந்த யுத்தியைக் கையாளுவதாக சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

யு ட்யூப், பேஸ்புக், ட்விட்டர் என சமூகவலைத் தளங்களில் சீனிவாசனுக்கென பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது.


/

Popular Posts